168 பெரிய புராண விளக்கம்-T விரையார் பொழில்வி ழிம்மிழலை உரையால் உணர்வார் உயர்வாரே. ' அந்த நாயனார் குறிஞ்சிப்பண் அமையப் பாடியருளிய, ஒரு பாசுரம் வருமாறு: கண்ணிற் கலைாலே காமன் பொடியாகப் பெண்ணுக் கருள் செய்த பெருமான் உறைகோயில் மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும் விண்ணிற் புயல்சாட்டும் வீழி மிழலையே. ' அந்த நாயனார் குறிஞ்சிப் பண்ணில் பாடியருளிய ஒரு. திருவிருக்குக்குறள் வருமாறு: வாசி தீரவே, காசு நல்குவீர் மாசில் மிழலையீர், ஏகல் இல்லையே, ' அந்த நாயனார் வியாழக்குறிஞ்சிப் பண்ணில் பாடி யருளிய ஒரு திருவிராகப் பாசுரம் வருமாறு: அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர் நலமலி உருவுடை யவர் நகர் மிகுபுகழ் நிலமலி மிழலையை நினையவ லவரே. அந்த நாயனார் மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் பாடி யருளிய ஒரு ப சுரம் வருமாறு: ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கி நின்று நேரியநான் மறைப்பொருளை உரைத்தொளிசேர் நெறியளித் தே ன் நின்ற கோயில் பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஒசை கேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும் மிழலை யாமே. அந்த நாயனார் காந்தாரப் பஞ்சமப் பண்ணில் பாடி யருளிய ஒரு பாசுரம் வருமாறு:
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/174
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
