பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 169; கேள்வியர் நாடொறும் ஒதும்நல் வேதத்தர் கேடிலா வேள் விசெய் அந்தணர் வேதியர் விழிமிழலையார் வாழியர் தோற்றமும் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம் ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட் கணியரே. ’’ அந்த நாயனார் சாதாரிப் பண்ணில் பாடியருளிய ஒரு திருவிராகப் பாசுரம் வருமாறு: சீர்மருவு தேசினொடு தேசமலி செல்வமறை போர்கள் பணியத் தார்மருவு கொன்றையணி தாழ்சடையி னான்அமர்ச யங்கொள் பதிதான் பார்பருவு பங்கயமுயர்ந்தவயல் சூழ்பழனம் நீட அருகே கார்மருவு வெண்கனக மாளிகை கவின் பெருகு வீழநகரே. ” х அந்த நாயனார் சாதாரிப் பண்ணில் பாடியருளிய மற். றொரு திருவிராகப் பாசுரம் வருமாறு: மட்டொளி விரிதரு மலர் நிறை சுரிகுழல் மடவரல் பட்டொளி மணியல் குல் உமையமை உருவொரு பாகமாக் கட்டொளிர் புனலொடு கடியா வுடனுறை முடிமிசை விட்டொளி உதிர்பிதிர் மதியவர் பதிவீழி மிழலையே..' அந்த நாயனார் சாதாரிப் பண்ணில் பாடியருளிய ஒரு திரு முக்கால் வருமாறு: