பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†170 பெரிய புராண விளக்கம்-7 வெண்மதி தவழ்மதில் மிழலையு ளீர்சடை ஒண் மதி அணியுடை பீரே ஒண்ம்தி அணியுடை பீர் உமை உணர்பவர் கண் மதி மிகுவது கடனே. ’’ அந்த நாயனார் பழம்பஞ்சுரப் பண்ணில் பாடியருளிய ஓர் ஈரடிப் பாசுரம் வருமாறு: . வேலின் நேர்தரு கண்ணினாள் உமை பங்கன் அங்கனன் மிழலை மாநகர் ஆல நீழலின் மேயினான் அடிக் கன்பர் துன்பிலரே. " அந்த நாயனார் பழம் பஞ்சுரப் பண்ணில் பாடியருளிய ஒரு திருவியமகப் பாசுரம் வருமாறு: " துன்று கொன்றைநஞ் சடையதே தூய கண்டம்நஞ் சடையதே கன்றின் மானிடம் கையதே . கல்வின் மானிடக் கையதே என்றும் ஏறுவ திடவமே என்னி டைப்பலி யிடவமே நின்ற தும்மிழலை உள்ளுமே நீரெனைச் சிறிதும் உள்ளுமே. ’’ புற நீர்மைப் பண்ணில் அமைந்த ஒரு பாசுரம் வரு மாறு: .

  • புள்ளித்தோல் ஆடை பூண்பது நாகம்

பூசு சாந்தம் பொடிநீறு கொள்ளத்தி விளக்குக் கூளிகள் கூட்டம் காளியைக் குணம்செய்கூத் துடையோன் அள்ளற்கா ராமை அகடுவான் மதியம் ஏய்க்கமுட் டாழைகள் ஆனை வெள்ளைக்கொம் பீனும் விரிபொழில் வீழி மிழலையான் என வினை கெடுமே. ’’