திருநாவுக்கரசு நாயனார் புராணம் - - 171 இந்தத் தலத்தைப்பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு: . நிலையிலா ஊர்மூன் றொன்ற நெருப்பெரி காற்றம்! ராகச் சிலையும் நா னதுவும் நாகம் கொண்டவர் தேவர்தங்கள் தலையினால் தரித்த என்பும் தலைமயிர் வட மும்பூண்ட விலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்தனாரே. ' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திரு விருத்தம் வரு 4ம்ாறு : வான்சொட்டச் சொட்டநின் றட்டும் வளர்மதி யோடயலே தேன்சொட்டச் சொட்டநின் றட்டும் திருக்கொன்றை சென்னிவைத்தீர் மான்பெட்டை நோக்கி மணாளிர் மணிநீர் மிழலையுள்ளீர் நான்கட்ட றும்மை மறக்கினும் என்னைக் குறிக் கொண்மினே.
- F.
அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: - பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர் பொங்கரவர் சங்கார்வெண் குழையோர் காதர் கேதிசரம் மேவினார் கேதாரத்தார் கெடில வட அதிகை வீரட் டத்தார் மாதுயரம் தீர்த்தென்னை உய்யக் கொண்டார் மழபாடி மேய மழுவா ளனார் வேதிகுடி உள்ளார் மீயச் சூரார் விழி மிழலையே மேவி னாரே. '