பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 . பெரிய புராண விளக்கம்-7 மற்றொரு திருப்பதிகத்தில் வரும் ஒரு திருத்தாண்டகம் வருமா இ) : ஆலைப் படுகரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண் சீலமுடை அடியார் சிந்தை யான் காண் திரிபுரம்மூன் றெரிபடுத்த சிலையி னான் காண். பாலினொடு தயிர் நறுநெய் ஆடி னான்காண். பண்டரங்க வேடன்கா ண் பலிதேர் வான்காண் வேலை விடமுண்ட மிடற்றி னான்காண் விண்ணிழிதண் வீழி மிழலை யானே.” பின்னும் ஒரு திருப்பதிகத்தில் உள்ள ஒரு திருத்தாண் டகம் வருமாறு: - - - -- நீறணிந்த திருமேனி நிமனர் போலும் நேமிநெடு மாற்கருளிச் செய்தார் ப்ோலும் ஏறணிந்த கொடியுடைஎம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரிசரத்தால் எய்தார் போலும் வேறணிந்த கோலமுடை வேடர் போலும் வியன் வீழி மிழலையுறை விகிர்தர் போலும் ஆறணிந்த சடாமகுடத் தழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே. சுந்தரமூர்த்தி நாயனார் சீகாமரப் பண்ணில் பாடி யருளிய ஒரு பாசுரம் வருமாறு: - ஊனை உற்றுயிர் ஆயினர் ஒளி - மூன்றுமாய்த் தெளிநீரொ டானஞ்சின் தேனை ஆட்டுகந்தீர் செழுமாடத் திருமிழலை மானை மேவிய கையினிர்மழு ஏந்தினர் மங்கை பாகத்திர் விண்ணில் ஆன விழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே...'