பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 173 பின்பு வரும் 253-ஆம் கவியின் க நத்து வருமாறு: "ஒரு வரம்பு இல்லாத சீர்த்தியைப் பெற்றவராகிய திரு நாவுக்கரசு நாயனார் வாய்ப்பாக அமைந்த திரு விழிமிழலை யில் திருக்கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் பெருமை யைப் பெற்ற மாணிக்கத்தைப் போன்றவராகிய விழி நாதரை அந்த நாயனார் பணிந்து விட்டு அந்த விழிநாத ரிடம் பிரிய முடியாத விடையைப் பெற்றுக் கொண்டு மலர்கள் மலர்ந்த குளிர்ச்சியைப் பெற்ற நீர் நிலைகள் சுற்றி யிருக்கும் திருவாஞ்சியத்திற்கு எழுந்தருளி வாஞ்சி லிங்கேசு வரரை வாழ்த்தி வணங்கிவிட்டுப் பரிசுத்தராகிய சிவபெரு மானார் எழுந்தருளி வாழும் பல தலங்களுக்கு எழுந்தருளி தம்முடைய திருவுள்ளத்தில் அமைந்த பக்தியோடு அந்தத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை அந்த நாயனார் வணங்கிவிட்டு இசையைப் பெற்றவையும், சொற். சுவை பொருட்சுவை ஆகிய வளப்பத்தைப் பெற்ற செந் தமிழ் மொழியில் அமைந்த திருப்பதிகங்களை அந்தச் சிவ பெருமான்களுக்கு அணிந்து விட்டு மேலே எழுந்தருளி செல் வர்கள் வாழும் திருமறைக்காடாகிய வேதாரணியத்தை அந்த நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு: வாய்ந்த மிழலை மாமணியை வனங்கிப் பிரியா விடைகொண்டு பூந்தண் புனல்சூழ் வாஞ்சியத்தைப் போற்றிப் புனிதர் வாழ்பதிகள் ஏய்ந்த அன்பி னால்இறைஞ்சி இச்ைவண் தமிழ்கள் புனைந்துபோய்ச் சேர்ந்தார் செல்வத் திருமறைக்கா டெல்லை இல்லாச் சீர்த்தியினார். ' இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைத் துள்ளது. எல்லை-ஒரு வரம்பு. இல்லா-இல்லாத. ச்:சந்தி. சீர்த்தியினார்.சீர்த்தியைப் பெற்றவராகிய திருநாவுக்கரசு தாயனார். வாய்ந்த-வாய்ப்பாக அமைந்த. மிழலை-திரு