பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பெரிய புராண விளக்கம்-7 விழிமிழலையில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக் கும்; ஆகுபெயர். மா-பெருமையைப் பெற்ற, மணியை. மாணிக்கத்தைப் போன்றவராகிய வீழிநாதரை உவம <毁@、 பெயர். வணங்கி-அந்த நாயனார் பணிந்துவிட்டு. ப்:சந்தி. பிரியா-அவரைப் பிரிய முடியாத விடைகொண்டு-விடையை அந்த விழிநாதரிடம் பெற்றுக்கொண்டு. பூம் மலர்கள் மலர்ந்த, ஒருமை பன்மை மயக்கம். அந்த மலர்களாவன: செந்தாமரை மலர், வெண்டாமரை மலர், ஆம்பல் மலர், அல்லி மலர், செங்கழுநீர் மலர். குமுத மலர் முதலிய நீர்ப் பூச்கள். தன்-குளிர்ச்சியைப் பெற்ற பு ைல் - குளம், ஏரி, ஆறு, குட்டை, வாவி, கிணறு முதலிய நீர் நிலைகள் ஆகு பெயர். சூழ்-சுற்றியிருக்கும். வாஞ்சியத்தை-திருவாஞ்சி யத்திற்கு எழுந்தருளி, உருபு மயக்கம். ப்:சந்தி, போற்றிவாழ்த் தி வணங்கி விட்டு, ப்:சந்தி. புனிதர்பரிசுத்தராகிய சிவபெருமானார். வாழ்-எழுந்தருளிவாழும். பதிகள்-பல தலங்களுக்கு எழுந்தருளி. ஏய்ந்த-தம்முடைய திருவுள்ளத்தில் அமைந்த, அன்பினால்-பக்தியோடு, உருபு. மயக்கம், இறைஞ்சி-அந்தத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை அந்த நாயனார் வனங்கிவிட்டு. இசைசங்கீதத்தைப் பெற்ற வண்-சொற்சுவை பொருட் சுவை: ஆகிய வளப்பத்தைப் பெற்ற. தமிழ்கள்-செந்தமிழ் மொழி யில் அமைந்த திருப்பதிகங்களை ஆகுபெயர். புனைந்துஅந்தச் சிவபெருமான்களுக்கு அணிந்து விட்டு. போய். மேலே எழுந்தருளி, ச்: சந்தி. செல்வ-செல் வர் ள் r மும் திணை மயக்கம். த்:சந்தி. திருமறைக்காடு-திருமறைக் காடாகிய வேதாரணியத்தை. சேர்ந்தார்.அந்த நாயனார். அடைந்தார். • t" திருவாஞ்சியம்: இந்தத் தலம் சோழநாட்டில் உள்ளது. இங்கே கோயில் கொண்டிருப்பவர் வாஞ்சிலிங்கேகவரர்: வாஞ்சி நாதர் என வும் வழங்குவர். அம்பிகையின் திரு. நாமங்கள் மங்களநாயகி, வாழவந்த நாயகி என்பவை: