திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 175 தலவிருட்சம் சந்தன மரம். தீர்த்தம் குப்த கங்கை. இது நன்னிலத்திற்கு மேற்குத் திசையில் ஆறரை மைல்துாரத்தில் உள்ளது. இந்தத் தலம் புத்தாறு என்னும் ஆற்றினுடைய வடகரையில் உள்ளது. திருமால் வாஞ்சி நாதரைப் பூசை புரிந்து தம்மைவிட்டுப் பிரிந்து சென்ற திருமகளை அடையப் பெற்ற தலம் இது. திரு வாஞ்சியம்-திருவைத் திருமால் வாஞ்சித்த இடம். வாஞ்சித்த-விரும்பிய, தலவிருட்சமாகிய சந்தனமரம்ஆலயத்தின் பிராக ரத்தில் உள்ளது.குப்தகங்கை என்னும் தீர்த்தம் திருக்கோயிலுக்கு வடதிசையில் இருக் கிறது. கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை களில் இந்தத் தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பு என்பர். இந்தத் தலத்தில் இறக்கும் மக்களுக்கு யமவாதனை இல்லை என்று ஆன்றோர் கூறுயர். இந்தத் திருக்கோயிலில் யமனுக்கு ஒருசந்நிதி உள்ளது. காசிக்குநிகராகப் பாராட்டப் பெறும் தமிழ் நாட்டில் உள்ள ஆறு தலங்களுக்குள் இதுவும் ஒன்று. இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார். பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு: ' அங்கம் ஆறும் அருமறை நான்குடன் தங்கு வேள்வியர் தாம்பயிலுந்நகர் செங்கண் மாலிட மார் திரு வாஞ்சியம் தங்கு வார் நம் அமரர்க் கமரரே. ’ இந்தத் தலத்தைப் பற்றிப பியந்தைக் காந்தாரப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் ப்ாடியருளிய ஒ . பாசுரம் வருமாறு:
- வாழை யின்கனி தானும்
மதுவிம்மு வருக்கையின் சுனளயும் கூழை வாரைம் தம்மிற் கூறிது சிறிதெனக் குழறித் தாழை வாழையந் தண்டாற் - செருக்கெய்து தருக்கு வாஞ்சியத்துள்