திருநாவுக்கரசு நாயனார் புராணம் 177 கயம்மை சிறப்புடையவர். இந்தத் திருக்கோயிலில் உள்ள திருவிளக்கில் உள்ள நெய்யை ஒர் எவி வந்து நக்கிக் குடிக்கும் பொழுது அந்த விளக்கின் சுடர் அதனுடைய மூக்இற் பட்டது. அப்போது அந்த எலி தன்னுடைய மூக்கை எடுத்துக் கொள்ளத் திருவிளக்கு பிரகாசமாக எரிந்தது. அந்தத் திருவிளக்கு மங்கும் சமயத்தில் அந்த எலி இவ்வாறு செய்தமையால் வேதாரணியேசுவரர் அதற்கு மூன்று உலகங் களையும் ஆட்சி புரியுமாறு திருவருளை வழங்கினார். அந்த எலி மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்து அரசாட்சியைப் புரிந்தது. இந்தச் செய்தியைத் திருநாவுக் கரசு நாயனார் திருக்குறுக்கையைப் பற்றிப் பாடியருளிய திருநேரிசைகளில் எட்டாவது திருநேரிசையில், நிறைமறைக்காடு தன்னில் . நீண்டெரி தீபந் தன்னைக் கறைநிறத் தெவிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவானுலகும் எல்லாம் குறைவறக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்ட னாரே. is 3. என்று சிறப்பித்திருக்கிறார். - மறையடி வழுத்திய மறைவனத் தொருநாள் மணிச்சுடர் நறுநெய் கவர்மதிக் கருப்பைக் கிருவகை ஏழெனும் திருவுல கனைத்தும் கொடுத்தவன்.' என்று கல்லாடத்தில் வருவதைக் காண்க. மற்றொரு பாசுரம் வருமாறு: பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி மலரால்வழி பாடுசெய் மாமறைக் காடர் தி-12
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/183
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
