பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 183 கின்ற அடிக்கும் மணியைக் கட்டித் தொங்க விட்டிருக்கும் .உயரமான கோபுர வாசலுக்கு அந்த த் திருநாவுக்கரசு நாய னார் எழுந்தருளி வேதாரணியேசுவரரைப் பணிவாரா னார். பாடல் வருமாறு: பரவை ஒதக் கழிக்கானற் பாங்கு நெருங்கும் அப்பதியில் அரவச் சடைஅந் தணனாரை அகில மறைகள் அர்ச்சனைசெய் துரவக் கதவம் திருக்காப்புச் செய்த அந்நாள் முதல்இங்காள் வரையும் அடைத்தே கிற்கின்ற மணிநீள் வாயில் வணங்குவார்.

  1. *

பாவை-கடலினுடைய, ஒத-அலைகள் வீசும்: ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கழி-உப்பங்கழிகளுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். ச்: சந்தி. கானல்-கடற்கரைச்சோலைக் கும். பாங்கு-பக்கத்தில் நெருங்கும்-பலவகையாகிய மரங்கள் நெருங்கி வளர்ந்து நிற்கும். அப்பதியில்-அந்தச் சிவத்தல மாகிய வேதாரணியத்தில். அரவ-பாம்புகளை; ஒருமை பன்மை மயக்கம். ச்:சந்தி. சடை-தம்முடைய தலையின் மேல் உள்ள சடாபாரத்தில் அணிந்திருக்கும். அந்தண னாரை-வேதியராகிய வேதாரணியேசுவரவரை. அகில மறைகள்-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய 67ುಖT வேதங்களும். அர்ச்சனை செய்து-அருச்சனையைப் புரிந்து விட்டு, உரவ-வலிமை யைப் பெற்ற, க்:சந்தி, கதவம். அந்த வேதாரணியேசு வரருடைய திருக்கோயிலின் திருவாசலில் உள்ள திருக் .கதவை. திருக்காப்புச் செய்த-அழகிய பூட்டினால் பூட்டி வைத் . அந்நாள் முதல்-அந்தக் காலம் முதல். இந்நாள்இந்தக் காலம். வ்ரையும்-வரையிலும். அடைத்தே-அந்தத் திருக்கதவு முடியே. நிற்கின்ற-நின்று கொண்டிருக்கின்ற.