திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 13 ஆடகேச்சுரம் என்னும் திருக்கோயில் இந்த ஆலயத்துக் குள் இருக்கிறது. அந்தத் திருக்கோயிலில் பிலம் ஒன்று கருங் கல்லினால் மூடப்பட்டிருக்கிறது. இந்தப் பிலம் புற்றிடம் கொண்டார் திருக்கோயிலுக்குத் தென் கிழக்குத் திசையில் உள்ளது. இதற்கு நாகபிலம் என்று பெயர். இதில் எழுந் தருளியிருக்கும் ஆடகேசரைத் தரிசித்து யாவரும் சுவர்க்க பதவியை அடைந்தமையினால் அந்தச் சொர்க்க லோகத்தில் இடம் இல்லாமற் போனதை அறிந்த இந்திரன் அரதணசிருங் கம் என்னும் மலையொன்றால் அந்த நாகபிலத்தை மூடி விட்டான் என்பது ஐதிகம். இந்தச்செய்தியைத் திருவாரூர்த் தல புராணத்தால் அறியலாம். கமலாம்பாள் சந்நிதி தனியாக இருக்கிறது. நீலோற்பலாம்பாள், அல்வியங் கோதை என்னும் திருநாமங்களைப் பெற்ற அம்பிகையின் சந்நிதி வேறாக உள்ளது. தெற்குக் கோபுரத்துக்கு அருகில் பரவை நாச்சியாருடைய திருக்கோயில் உள்ளது. மனு நீதிச் சோழ மன்னனுடைய புதல்வன் தேரில் ஏறிச் சென்றதும், ஒரு பசுமாட்டின் கன்றுக்குட்டி அந்தத்தேரினுடைய சக்கரங் களில் அகப்பட்டு இறந்ததும், அந்தச் சோழ மன்னன் தன்னுடைய புதல்வன்மேல் தன்னுடைய தேரை ஓட்டிச் சென்றதும் ஆகிய வரலாறுகளைக் காட்டுவதற்காகக் கருங் கல்லினால் தேர் முதலியவை செய்யப் பெற்று வைக்கப்பட் டிருக்கின்றன. இவை கிழக்குத் திசையில் உள்ள கோபுரத் துக்கு அருகில் உள்ளன. கமலாலயம் என்னும் பெரிய திருக் குளத்தின் நடுவில் ஒரு சிறிய ஆலயம் இருக்கிறது. இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: ' உயிரா வனமிருந் துற்று நோக்கி உள்ளக் கிழியின் உருவெழுதி உயிரா வனம்செய்திட் டுன்கைத் தந்தால் உணரப் படுவாரோ டொட்டிவாழ்தி
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/19
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
