பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பெரிய புராண விளக்கம்-7 அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் அருச்சனை புரிந்த தேவர்களினுடைய தலைவனாகிய வேதாரணியேசு வரனைத் திருமறைக் காட்டில் உள்ள ஆலயத்துக்குள் - நுழைந்து, தங்கி நிற்காமல் அடியேங்களாகிய இரண்டு நாயன்மார்சளும் தேவரீரை நேரில் தரிசித்துத் தேவரீரை வணங்கும் பொருட்டுத் தேவரீருடைய அழகிய சந்நிதிக்கு முன்னால் உள்ள கோபுர வாசற் கதவைப் பூட்டியுள்ள அழகிய பூட்டைத் திறந்தருளுவீராக’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் வேண்டிக் கொள்ள, அந்தக் கதவு திறக்காமல் இருந்தமையால் அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருநாவுக்கரசு நாயனாரைப் பார்த்து, அப்பர் சுவாமிகளே, இந்தக் கதவைப் பூட்டியிருக்கும் :பூட்டைத் திறக்குமாறு ஒரு பாசுரத்தைத் தேவரீர் பாடி யருள்வீராக’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய நெடுங்காலமாகப் புகழோடு வாழ்ந்து வரும் திருநாவுக்கரசு நாயனார். பாடல் வரு :மாறு: - ஆங்கப் பரிசை அறிந்தருளி ஆழித் தோணி புரத்தரசர் ஓங்கு வேதம் அருச்சனைசெய் உம்பர் பிரானை உள்புக்குத் தேங்கா திருவோம் நேர்இறைஞ்சத் திருமுன் கதவம் திருக்காப்பு நீங்கப் பாடும் அப்பர்’ என நீடும் திருநா வுக்கரசர்.' W. இந்தப் பாடல் குளகம். ஆங்கு-அவ்வாறு இருந்த. அப்பரிசை-அந்த இயல்பை என்றது கோயிலின் வாசற். கதவு பூட்டப்பட்டிருந்ததை, அறிந்தருளி-தெரிந்து கொண் டருளி. ஆழி-சமுத்திரத்தில் அமிழாமல் மிதந்த, த்:சந்தி, தோணிபுரத்து-தோணியைப் பெற்ற தோணிபுரமாகிய