பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 - பெரிய புராண விளக்கம்-7 பாரத்தில் அணிந்து கொண் டவராகிய வேதாரணியே சுவரர் அந்த வாசற் கதவைப் பூட்டியிருந்த அழகிய பூட்டைத் திறப்பதற்குத் தாமதம் செய்ய அந்த அழகிய வாசற். கதவைப் பூட்டிய பூட்டை, வேதாரணியேசுவரரே தேவரீர் நினைக்காமல் இருக்கிறீரே. இரக்கம் ஒரளவும் இல்லாதவரே என்ற கருத்தை வைத்து அந்தத் திருநாவுக் கரசு நாயனார் பாடியருளி வேதாரணியேசுவரரை வணங்: கினவுடன். பாடல் வருமாறு : - உண்iைர் மையினால் பிள்ளையார் உரைசெய் தருள அதனாலே, பண்ணி னேரும் மொழியாள் என்றெடுத்துப் பாடப் பயன் துய்ப்பான் தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக்கடைக்காப் பெண்ணிர், இரக்கம் ஒன்றில்லீர்! என்று பாடி இறைஞ்சுதலும்.” இந்தப் பாடல் குளகம், உள்-தம்முடைய திருவுள்ளத் தில் தோன்றிய, நீர் மையினால்-பான்மையால். பிள்ளை யார்- ஆளுடைய பிள்ளைய ராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். உரை செய்தருள- அப்பர் சுவாமிகளே, தேவ ரீர் இந்தக் கதவைத் திறக்குமாறு ஒரு பாசுரத்தைப் பாடியருள்வீராக’ என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. அதனால்-அவ்வாறு அவர் திருவாய் மலர்ந்து அருளிச் செய்த அந்த வார்த்தைகளினால் ஒருமை பன்மை மயக்கம். ஏ: அசைநிலை. பண்ணினேரும் மொழியாள் என்று"பண்ணினேரும் மொழியாள் என. எடுத்து-தொடங்கி. ப்:சந்தி. பாட-ஒரு பாசுரத்தை அந்தத் திருநாவுக்கரசு நாய -னார் பாடியருள. ப்:சந்தி. பயன்-அந்தப் பாசுரத்தின் பிரயோசனத்தை. துய்ப்பான்-நுகரும் பொருட்டு. தெண்தெளிவைப் பெற்ற, நீர்.கங்கையாற்றின் புனலை. அணிந் தார். தம்முடைய தலையின் மேல் உள்ள சடாபாரத்தில்