194 - பெரிய புராண விளக்கம் -? தில் மூழ்கி விட்டுப் பிறகு அதிலிருந்து எழுந்து வேதாரணி யேசுவரருடைய திருக்கோயிலுக்குள் நுழைந்து தங்களுடைய தலைவனாகிய வேதாரணியேசுவரனை அவனுடைய சந்நிதியில் இரண்டு நாயன்மார்களும் வணங்கி விட்டு: வாழ்த்துக்களைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்து மீண்டும் அந்த ஈசுவரரை வாழ்த்தி விட்டுச் செந்தமிழ் மொழியில்: அமைந்த மாலைகளாகிய திருப்பதிகங்களைப் பாடியருளி, தங்களுடைய திருமேனிகளில் உள்ள எலும்புகளும் கரையு. மாறு தங்களுடைய திருவுள்ளங்களில் உருக்கத்தை அடைந்து அந்த ஈசுவரரை மீண்டும் வணங்கி விட்டு அருமையான நிலையில் கோயிலுக்கு வெளியில் வந்து அந்த இரண்டு நாயன்மார்களும் சேர்ந்தார்கள். பாடல் வருமாறு :
- அன்பர் ஈட்டம் களிசிறப்ப
ஆண்ட அரசும் சிவக்கன்றும் இன்ப வெள்ளத் திடைமூழ்கி எழுந்துள் புகுந்து தம்பெருமான் முன்பு பணிந்து போற்றிசைத்துப் பரவி மொழிமா லைகள்பாடி என்பு கரைய உள்ளுருகி இறைஞ்சி அரிதிற் புறத்தணைந்தார்.' அனபர்-அந்த வேதாரணியத்தில் வாழும் பக்தர்கள் : ஒருமை பன்மை மயக்கம்.ஈட்டம்-கூடியிருத்த கூட்டம். களிகளிப்பில். சிறப்ப-சிறப்பை அடைந்து விளங்க. ஆண்டதிருவதிகை வீரட்டானேசுவரர் தடுத்து ஆட்கொண்ட. அரசும்-திருநாவுக்கரசு நாயனாரும்; திணை மயக்கம். சிவ. சிவபெருமானாகிய பசுமாட்டினுடைய, க்:சந்தி. கன்றும்கன்றுக் குட்டியைப் போன்ற திருஞான சம்பந்த மூர்த் தி: நாயனாரும். இன்ப வெள்ளத்திடை-ஆனந்தமாகிய நீர் வெள்ளத்தில். மூழ்கி.முழுகி விட்டு. எழுந்து-பிறகு, அதிலிருந்து எழுந்து. உள்-வேதாரணியேசுவரருடைய திருக்க கோயிலுக்குள். புகுந்து-நுழைந்து. தம்-தங்களுடைய