பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 195 என்றது திருஞான சம்பந்த மூர்த் தி நாயனார், திருநாவுக் கரசு நாயனார் என்னும் இரண்டு நாயன்மார்களுடைய என்பதை. பெருமான்-தலைவனாகிய வேதாரணியேசு வரனை முன்பு- அவனுடைய சந்நிதியில். பணிந்து-இரண்டு நாயன்மார்களும் வணங்கி விட்டு. போற்று-வாழ்த்துக்களை: ஒருமை பன்மை மயக்கம்; முதனிலைத் தொழிற் பெயர். இசைத்து-திருவாய் மலர்ந்தருளிச் செய்து. ப்:சந்தி. ரவிமீண்டும் அந்த ஈசுவரரை வாழ்த் திவிட்டு. மொழி-செந்தமிழ் மொழியில் அமைந்த. மாலைகள்-மாலைகளாகிய பல திருப்பதிகங்களை. பாடி-அந்த இரண்டு நாயன்மார்களும் பாடியருளி. என்பு-தங்களுடைய திருமேனிகளில் உள்ள எலும்புகளும் ஒருமை பன்மை மயக்கம். கரைய.கரையு. மாறு. உள்-தங்களுடைய திருவுள்ளங்களில்; ஒருமை பன்மை மயக்கம். உருகி-டக்கியினால் உருக்கத்தை அடைந்து. இறைஞ்சி. அந்த ஈசுவரரை மீண்டும் வணங்கி விட்டு. அரிதின்-பிரிவதற்கு அருமையாகிய நிலையில். புறத்துகோயிலுக்கு வெளியில் அணைந்தார்-அந்த இரண்டு நாயன் மார்களும் சேர்ந்தார்கள். பிறகு வரும் 271-ஆம் கவியின் கருத்து வருமாறு : அவ்வாறு வேதாரணியேசுவரருடைய திருக்கோயி லுக்கு வெளியே எழுந்தருளியவர் அந்த வெளியிடத்தில் நின்று கொண்டு வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார் பரிசுத்தராகிய அந்த வேதாரணியேசுவரர் வழங்கிய திருவருளினால் திருக்கோயிலினுடைய கோபுர வாசலில் உள்ள இந்தக் கதவு திறந்தும் மூடியும் நடக்கும் வழியை திருந்துமாறு இமயமலை அரசனுடைய புதல்வியாகிய பெரிய நாயகி தன்னுடைய அழகிய கொங்கைகளிலிருந்து ஒருபொற். கிண்ணத்தில் கறந்த பாலை சிவஞானத்தை அதனோடு குழைத்து ஊட்ட அதைத் திருவமுது செய்தருளியவரும், புகலியாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளியவரும், அந்தணர்களில் கவுண்டின்ய கோத்திரத்தில் உதித்தவரும்