பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 197 உதித்தவரும் ஆகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா ரிடம்: உருபு மயக்கம். நிறைந்த-அழகு நிரம்பியுள்ள: உறுதி நிரம்பியுள்ள எனலும் ஆம். கதவம்-இந்தக் கதவை. அடைக்கும் வகை-மூடுமாறு. நீரும்.தேவரீரும். பாடியருளும் -ஒரு பாசுரத்தைப் பாடியருளுவீராக. என-என்று திருநாவுக் கரசு நாயனார் திரு வாய் மலர்ந்தருளிச் செய்ய. - பிறகு உள்ள 212-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: சண்பையாகிய சீகாழியை ஆட்சி புரியும் தமிழ் விரக ராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும் அந்தத் திரு நாவுக்கரசு நாயனார் நல்ல பண்போடு திருவாய் மலர்ந் தருளிச் செய்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு ஒரு திருப் பதிகத்தைப் பாடியருளும் அந்தச் சமயத்தில் ஒரு திருக்கண் பொலிவோடு இருந்த நெற்றியைப் பெற்ற கருமையாகிய திருக்கழுத்தைக் கொண்டவராகிய வேதாரணியேசுவரர் வழங்கிய திருவருளினால் வேகமாக அப்பொழுதே உறுதி யாக உள்ள தங்கத்தைப் பதித்த அந்தக் கோபுர வாசலில் உள்ள கதவு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தொடங் கிய அழகிய பாசுரத்தினால் அழகிய பூட்டினால் பூட்டிக் கொண்டது. பாடல் வருமாறு: - - சண்பை ஆளும் தமிழ்விரகர் தாமும் திருகா வுக்கரசர் பண்பின் மொழிந்த உரைகொண்டு பதிகம் பாடும் அவ்வளவில் கண்பொற் பமைந்த நுதற்காள கண்டர் அருளால் கடிதுடனே திண்பொற் கதவம் திருக்காப்புச் செய்த தெடுத்த திருப்பாட்டில். ' சண்பை-சண்பையாகிய சீகாழியை. ஆளும்-ஆட்சி புரிந்தருளும். தமிழ் விரகர் தாமும்-முத்தமிழ் விரகராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும்; தாம்: அசைநிலை. திருநாவுக்கரசர்-திருநாவுக்கரசு நாயனார், பண்பின்-நல்ல