198 - பெரிய புராண விளக்கம்-7 குணத்தோடு. மொழிந்த-திருவாய் மலர்ந்தருளிச் செய்தி. உரை.வ்ார்த்தைகளை; ஒருமை பன்மை மயக்கம், கொண்டு. ஏற்றுக் கொண்டு. பதிகம்-ஒரு திருப்பதிகத்தை. பாடும்அந்தத் திருஞான சம்பந்த மூர்த் தி நாயனார் பாடியருளும், அவ்வளவில். அந்தச் சமயத்தில். கண் . ஒரு திருவிழி. பொற்பு-தோற்றப் பொலிவோடு. அமைந்த-பொருந்தி யிருந்த, நுதல்-நெற்றியைப் பெற்ற காள சண்டர்-திருமால் பள்ளி கொண்டருளிய பாற்கடலில் எழுந்த ஆலகால விடத்தை விழுங்கியமையால் கருமையாகிய திருக்கழுத்தைக் கொண்ட வேதாரணியேசுவரர். அருளால்-வழங்கிய திருவருளினால். கடிது-வேகமாக. உடனே-அப்பொழுதே; அந்தத் திருப்பதிகத்தைத் திருஞான சம்பந்த மூர்த்தி நாய னார் பாடியருளிய அப்பொழுதே, திண் - உறுதியைப் பெற்ற பொன்-தங்கத்தைப் பதித்த கதவம்-அந்தக் கோபுர வாசலில் உள்ள கதவு. எடுத்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தொடங்கிய, திருப்பாட்டில்-அழகிய பாசுரத்தி னால், உருபு மயக்கம். திருக்காப்புச் செய்தது.அழகிய பூட்டினால் பூட்டிக் கொண்டது. அவ்வாறு அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் இந்தளப் பண்ணில் பாடியருளிய திரு பதிகத்தில் வரும் ஒரு பாசுரம் வருமாறு : - சதுரம் மறைதான் துதிசெய் துவணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன் கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே.' பிறகு வரும் 273-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அந்தப் பூட்டுப் பூட்டிக் கொண்ட அந்தச் செயலைப் பார்த்து ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், திருவதிகை வீரட்டானே சுவரர் தடுத்து ஆட்கொண்ட திருநாவுக்கரசு நாயனாரும் மகிழ்ச்சியை
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/204
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
