திருநாவுக்கரசு நாயனார் புராணம் 199 அடைந்து, ' இவ்வாறு இந்தப் பூட்டுப் பூட்டிக் கொண்டது நம்முடைய தலைவனாகிய வேதாரணியேசுவரன் தன்னு டைய திருவருளை வழங்கும் பாக்கியத்தை அடைந்தோம்' என எண்ணி அந்த வேதாரணியேசுவரருடைய திருக் கோயிலில் அந்த ஈசுவரரை வணங்கிய பிறகு ஒரு திருப்பதி கத்தைச் சொற் சுவை, பொருட் சுவை என்னும் இரண்டு சுவைகளும் நிரம்ப அமையுமாறு ஆளுடைய பிள்ளையா சாகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளி அந்த வேதாரணியேசுவரரை வணங்கிப் பணியலானார்; அந்த வேதாரணியேசுவரருடைய திருக்கோயிலுக்கு எதிரில் உள்ள தங்கத்தைப் பதித்த அழகிய கோபுர வாசலின் வழி யாக பக்தர்கள் கோயிலுக்கு உள்ளே புகும் வழக்கமாகிய அந்த நிகழ்ச்சி எல்லாக் காலத்திலும் நடைபெற்று வந்தது.” :பாடல் வருமாறு : அதுகண்டுடைய பிள்ளையார் தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந் திதுகம் பெருமான் அருள்செய்யப் பெற்றோம்' என்றங் கிறைஞ்சியபின் பதிகம் கிரம்பப் பிள்ளையார் பாடித் தொழுது பணிவுற்றார்; எதிர்பொற் றிருவா யிலின்வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியதால்." அது-அந்தப் பூட்டுப் பூட்டிக் கொண்டதாகிய அந்தச் ெேசயலை, கண்டு-பார்த்து, உடைய பிள்ளையார் தாமும்ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும். தாம்:அசைநிலை. ஆண்ட-திருவதிகை வீரட் டானேசுவரர் தடுத்து ஆட்கொண்ட, அர்சும்-திருநாவுக் கரசு நாயனாரும்: திணை மயக்கம் மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து. இது.இவ்வாறு இநதப் பூட்டுப் பூட்டிக் கொண்ட இந்த அற்புதச் செயல். நம்-நம்முடைய, என்றது திருஞான
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/205
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
