பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 . - பெரிய புராண விளக்கம்-7 டைய திருமடங்களுக்கு எழுந்தருளிய பிறகு, பாடல் வருமாறு: - * ' அங்கு நிகழ்ந்த அச்செயல்கண் டடியார் எல்லாம் அதிசயித்துப் பொங்கு புளகம் எய்திடமெய் பொழியும் கண்ணிர் பரந்திழிய எங்கும் நிகரொன் றில்லாத இருவர் பாதம் இறைஞ்சினார் கங்கள் புகலிப் பெருந்தகையும் அரசும் மடத்தில் கண்ணியபின்.” இந்தப் பாடல் குளகம், அங்கு-அந்த வேதாரணியேசு வரருடைய திருக்கோயிலில், நிகழ்ந்த-நடந்த, அச்செயல்அந்த அற்புதமாகிய செயலை. கண்டு-பார்த்து. அடியார்வேதாரணியேசுவரருடைய அடியவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-எல்லாரும். அதிசயித்து - வியப்பை அடைந்து. ப்:சந்தி. பொங்கு-தங்களுடைய திருமேனி களில் பொங்கி எழுந்த புளகம்-புளகாங்கிதமாகிய மயிர்க் கூச்சை. எய்திட-அடைய. மெய்-தங்களுடைய திருமேனி களின் மேல்; ஒருமை பன்மை மயக்கம். பொழியும்-சொரியும், கண்-கண்களிலிருந்து வழியும்; ஒருமை பன்மை மயக்கம். நீர்-புனல். பரந்து பரவி. இழிய-தரையில் இறங்கி வழிய. எங்கும். எந்த ஊரிலும், நிகர்-தங்களுக்குச் சமானமாக. ஒன்று-ஒருவரும் திணை மயக்கம். இல்லாத இல்லாதவர்க ளாகிய; பெயரெச்ச வினையாலணையும் பெயர். இருவர்திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருநாவுக்கரசு நாய னார் ஆகிய இரண்டு நாயன்மார்களுடைய. பாதம்-திருவடி .களை; ஒருமை பன்மை மயக்கம் இறைஞ்சினார்-அந்த அடியவர்கள் வணங்கினார்கள்; ஒருமை பன்மை மயக்கம். நங்கள்-அடியேங்களுடைய; இது சேக்கிழார் தம்மையும் வேறு திருத் தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. புகலி: