பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 203 புகலியாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளியவரும். இட ஆகு பெயர். ப்:சந்தி. பெரும்-பெருமையையும்; தகையும்-தகுதியையும் பெற்றவரும் ஆகிய திருஞான சம் பந்த மூர்த்தி நாயனாரும். அரசும்-திருநாவுக்கரசு நாய னாரும்; திணை மயக்கம். மடத்தில்-தங்கள் தங்களுடைய திருமடங்களுக்கு, ஒருமை பன்மை மயக்கம் , உபுரு மயக்கம். நண்ணிய-எழுந்தருளிய, பின்-பிறகு. பிறகு உள்ள 275-ஆம் கவியின் கருத்து வருமாறு: அருமையாகிய முறையில் அந்த வேதாரணியேசுவர ருடைய திருக்கோயிலுக்கு முன்னால் உயரமாக நிற்கும் கோபுரவாசலில் உள்ள கதவைத் திறக்கு மாறு திருநாவுக் கரசு நாயனார் பாடியருள அந்தக் கதவு மூடுமாறு அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய எளிய தன்மையை எண்ணி, நம்பராகிய வேதாரணியேசுவரரு டைய திருவுள்ளக் கருத்தைத் தெரிந்து கொள்ளாமல் சோர்வை அடைந்து விட்டேன்' என்று 5ā!ão) @}@ð [L! அடைந்து மிகவும் அச்சத்தை அடைந்து தம்முடைய திருமடத்தில் தம்முடைய குற்றத்தை எண்ணிச் சிந்தித்து தாம் அடையும் உணர்ச்சியோடு உண்மையிலிருந்தும் தவறாத வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார் உறக்கத்தை அடைந்தார் பாடல் வருமாறு : ...’ " அரிதில் திறக்கத் தாம் பாட * அடைக்க அவர்பாடிய எளிமை கருதி, கம்பர் திருவுள்ளம் அறியா தயர்ந்தேன்' எனக்கவன்று பெரிதும் அஞ்சித் திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ்கணித்து மருவும் உணர்வில் துயில்கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர். ' அரிதில்-அருமையாகிய முறையில். திறக்க-அந்த வேதாரணியேசுவரர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயி லுக்கு