திருநாவுக்கரசு நாயனார் புராணம் 15. பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய் ஆலத்தின்கீ ழானை நான்கண்ட தாருரே." குறிஞ்சிப் பண் அமைந்த திருவாதிரைத் திருப்பதிகத்தில் உள்ள ஒரு பாசுரம் வருமாறு: - * முத்து விதான மணிப்பொற்க வரிமுறையாலே பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப்பின்னே வித்தகக் கோல வெண்தலை மாலைவிரதிகள் அத்தன்.ஆருர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.' அந்த நாயனார் பாடியருளிய திருநேரிசை ஒன்று. வருமாறு: - பஞ்சின்மெல் அடியி னார்கள் பாங்கராய வர்கள் நின்று நெஞ்சில்நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார் நஞ்சணி மிடற்றி னானே நாதனே நம்ப னேநான் அஞ்சினேற் கஞ்சல் என்னிர் ஆருர் மூ லட்ட னிரே...' அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருவிருத்தம் வருமாறு:
- ஒருவடி வின்றிநின் றுண்குண்டர்
முன்மைக் குண்டு கொலோ செருவடி வெஞ்சிலை யாற்புரம் அட்டவன் சென்றடை யாத் திருவுடை யான்திரு ஆருர்த் திருமூலட் டானன் செங்கண் வொருவிடை யாண்டித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே." அவர் பாடியருளிய ஒரு திருக்குறுந் தொகை வருமாறு: விடையும் ஏறுவர் வெண்தலை பிற்பலி கடைகள் தோறும் திரியுமெம் கண்ணுதல்