பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கிரசு நாயனார் புராணம் 205 கொண்ட திருக்கோலத்தினுடைய தோற்றப் பொலிவி னோடும் எழுந்தருளி அந்தத் திருநாவுக்கரசு நாயனாரிடம், * யாம் திருவாய் மூரில் வீற்றிருப்போம்;எம்மைத் தொடரும் பொருட்டு வருவாயாக' என்று திருவாய் மலர்த்தருளிச் செய்தார். பாடல் வருமாறு : - . . " மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின்கண் உன்னித் துயிலும் பொழுதின்கண் உமையோர் பாகம் உடையவர்தாம் பொன்னின் மேனி வெண்ணிறு புனைந்த கோலப் பொலிவினொடும் துன்னி அவர்க்கு, வாய்மூரில் இருப்போம்; தொடர வா' என்றார்.' செல்வம்-செல்வர்கள் திணை மயக்கம். மன்னும்நிலை பெற்று வாழும். மறைக்காட்டு-திருமறைக் காடாகிய வேதாரணிகத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி . யிருக்கும்; ஆகுபெயர். மணியின்-மாணிக்கத்தைப் போன்றவ ராகிய வேதாரணியேசுவரருடைய, உவம ஆகு பெயர். பாதம்.திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். மனத்தின் கண்-தம்முடைய திருவுள்ளத்தில். உன் னி-தியானித்தபடியே. த்:சந்தி. துயிலும்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் உறங்கும். பொழுதின் கண்-சமயத்தில். உமை-உமா தேவியை ஒர் பாகம்-தம்முடைய ஒரு பாகமாகிய வாம. பாகத்தில். உடையவர் தாம்-எழுந்தருளச் செய்தவராகிய அந்த வேதாரணியேசுவரர். தாம்: அசைநிலை. பொன்னின்தங்கத்தைப் போன்ற மேனி-தம்முடைய திருமேனி முழு. வதும். வெண்-வெள்ளை நிறத்தைப் பெற்ற நீறு-விபூதியை, புனைந்த-அணிந்து கொண்ட, பூசிக் கொண்ட. கோல-திருக் கோலத்தினுடைய. ப்: சந்தி. பொலிவினொடும்-தோற்றப் பொலிவோடும். துன்னி-எழுந்தருளி. அவர்க்கு-அந்தத் திருநாவுக்கரசு நாயனாரிடம்: உருபு மயக்கம். வாய்மூரில்