பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பெரிய புராண விளக்கம்-7 திருவாய்மூரில். இருப்போம்-யாம் வீற்றிருப்போம். தொடரதொடரும் பொருட்டு. தொடர்ந்து’ எனலும் ஆம்;எச்சத். திரிபு. வா-நீ வருவாயாக. என்றார்-என்று வேதாரணியே ஈ. வரர் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். திருவாய்மூர் : இது சோழ நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் வாய்மூர் நாதேசுவரர். அம்பிகை பாவினும் நன்மொழி அம்மை. இது திருக்கோளியி விருந்து தென் கிழக்குத் திசையில் மூன்று மைல் தூரத்தில் உள்ளது. இது சப்தவிடங்கத் தலங்களுக்குள் ஒன்று. சூரியன் வழிபட்ட தலம் இது. திருக்கோயில் கிழக்குத் திசையைப் பார்த்தது. திருக்கோயிலுக்கு எதிரில் சூரிய தீர்த்தம் இருக் கிறது. திருநாவுக்கரசு நாயனார் வேதாரணியத்தில் தங்கி, யிருந்த பொழுது வாய்மூர் நாதேசுவரர் அவர் துயிலும் பொழுது அவருடைய கனவில் எழுந்தருளி, ந் திருவாய் மூருக்கு வருவாயாக’’ என்று கட்டளையிட்டருளினார். அதனைக் கேட்டு அந்த நாயனார் - எங்கே என்னை இருந்திடம் தேடிக் கொண் டங்கே வந்தடை யாளம் அருளினார் தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வாவென்று போனார் அதென்கொலோ." என்று பாடிய ருளிய படியே திருவாய்மூருக்கு அந்த நாயனார். எழுந்தருளிய சமயத்தில் அந்த நாயனாருக்குப் பின்பு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும் எழுந்தருள இரண்டு. நாயன்மார்களும் சேர்ந்து கொண்டு எழுந்தருளி வாய்மூர் நாதேசுவரரைத் தாசனம் செய்த தலம் இது. - திருநாவுக்கரசு நாயனார் திருவாய்மூரைப் பற்றிப் பாடி யருளிய ஒரு திருககுறுந்தொகை வருமாறு :

  • திறக்கட் பாடிய எ ைனினும் செந்தமிழ்

உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே. '