திருநாவுக்கரசு நாயனார் புராணம்) 207" திருநாவுக்கரசு நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிப்: பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: பாலின் மொழியாளோர் பாகம் கண்டேன் பதினெண் கணமும் பணியக் கண்டேன் நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல்கண்டேன் பெற்றம் கண்டேன். காலைக் கதிர்செய் மதியம் கண்டேன் கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன் மாலைச் சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட வாறே, ' பிறகு வரும் 77-ஆம் கவியின் கருத்து வருமாறு: திருநாவுக்கரசு நாயனார் துயிலிலிருந்து எழுந்து உணர்வு: உண்டாக, 'அடியேனைத் திருவாய்மூருக்கு நீ வருவாயாக என்று திருவாய் மலர்ந்தருளி விட்டுத் திருவாய்மூர்நாதேசுவரர் அப்பால் எழுந்தருளிச் சென்று விட்டார்; என்ன கார னமோ?” என்று அந்த நாயனார். பாடியருளி, இந்தக். கட்டளை அடியேனுடைய தலைவனாகிய லாயமூர்,நாதே சுவரன் வழங்கிய திருவருளானால் அடியேனும் அவ்வாறு திருவாய் முருக்குச் செல்வேன்' என்று எழுந்து வேதவன மாகிய வேதாரணியத்தைத் தம்முடைய பின்பு இருக்கச் செய்து அந்த நாயனார் வேகமாக எழுந்தருள அந்த நாய னாருக்கு முன்னால் எல்லாத் தேவர்களுக்கு முதல் மூர்த்தி: யாகிய வாய்மூர் நாதேசுவரர் முன்னால் காட்டியருளும், அந்த வேடத்தோடு எழுந்தருளிக் காட்சியை வழங்கியருள.' பாடல் வருமாறு: - போதம் நிகழ, வாஎன்று போனார்; கன்கொல்' எனப்பாடி "ஈதெம் பெருமான் அருளாகி லியானும் போவேன். என்றெழுந்து வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர்முன்னே
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/213
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
