208 - பெரிய புராண விளக்கம்.உர ஆதி மூர்த்தி முன்காட்டும் அவ்வே டத்தால் எழுந்தருள. இந்தப் பாடல்குளகம்.போதம்-திருநாவுக்கரசு நாயனார். துயிலிலிருந்து விழித்துக் கொண்டு எழுந்து உணர்வு. நிகழஉண்டாக, வா-அடியேனைத் திருவாய்மூருக்கு நீ வருவா யாக. என்று-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு, போனார்-திருவாய்மு நாதேசுவரர் அப்பால் எழுந் தருளிச் சென்று விட்டார். என் கொல்-என்ன காரணமோ? கொல்: அசைநிலை. என-என்ற கருத்து; இடைக்குறை. மு:சந்தி. பாடி- ஒரு பாசுரத்தை அந்த நாயனார் பாடியருளி' சது-இந்தக் கட்டளை. எம்பெருமான் - அடியேனுடைய தலைவனாகிய வாய் முர்நாதேசுவரன். அருளாகில்-வழங் கிய திருவருளானால், இ. குற்றியலிகரம். யானும்-அடி யேனும், போவேன்-திருவாய்மூருக்குச் செல்வேன். என்றுஎன எழுந்து-எழுந்திருந்து, வேதவனத்தை - வேதவன மாகிய திருமறைக் காட்டை. ப்:சந்தி. புறகு இட்டு-தமக் குப் பின்னால் இருக்கச் செய்து விரைந்து-வேகத்தை உடையவராகி, போக-அந்த நாயனார் திருவாய்மூருக்கு எழுந்தருள. அவர்-அந்த நாயனாருக்கு. முன்-முன்னால், ஏ:அசைநிலை. ஆதிமூர்த்தி-எல்லாத் தேவர்களுக்கும் முதல் மூர்த்தியாராகிய வாயமூர் நாதேசுவரர். மூர்த்தி, ஒருமை பன்மை மயக்கம். முன்-முன்னால். காட்டும். காட்டியருளும். அவ்வேடத்தால்-அந்த வேடத்தோடு; உருபு மயக்கம். எழுந்தருள-எழுந்தருளித் தம்முடைய காட்சியை வழங்க. - - இந்தப் பாடலில் குறிப்பிட்ட திருக்குறுந்தொகைகள் உள்ள திருப்பதிகத்தில் இருக்கும் ஒரு திருக் குறுந்தொகை வருமாறு: - | மன்னும் மாமறைக் காட்டு மணாளனார் உன்னி உன்னி உறங்குகின்றேனுக்குத் 3 * *
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/214
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
