பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 213 " அழைத்துக் கொடுபோங் தணியார்போல் காட்டி மறைந்தார்’ எனஅயர்ந்து, * பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித் தேனுக் கேயல்லால் உழைத்தாம் ஒளித்தால் கதவம்தொண் டுறைக்கப் பாடி அடைப்பித்த தழைத்த மொழியார் உப்பாலார் தாமிங் கெப்பால் மறைவ'தென. - இந்தப் பாடல் குளகம், அழைத்துக்கொடு-அந்தத் திரு நாவுக்கரசு நாயனார் அடியேனைக் கூட்டிக்கொண்டு. போந்து-எழுத்தருளி. அணியார்போல்-சமீபத்தில் இருப்ப வரைப் போல, காட்டி-தம்மைக் காண்பித்தருளி. மறைந் தார்-பிறகு மறைந்து போய்விட்டார். என-என்று எண்ணி: இடைக்குறை, t அயர்ந்து-அந்த நாயனார் சோர்வை அடைந்து. பிழைத்து-பிழையைப் புரிந்து விட்டு. ச்:சந்தி. செவ்வி-சந்தர்ப்பத்தை, அறியாது - அடியேன் தெரிந்து கொள்ளாமல், ஏ: அசை நிலை. திறப்பித் தேனுக்கேவேதாரணியேசுவரருடைய திருக்கோயிலுக்கு முன்னால் உயரமாக நிற்கும் கோபுரவாசலில் உள்ள கதவைப் பூட்டி யிருந்த பூட்டைத் திறக்குமாறு புரிந்த அடியேனுக்கே. அல் லால்-அல்லாமல். உழை-பக்கத்தில். த், சந்தி. தாம்: என்றது வேதாரணியேசுவரரை. ஒளித்தால் - மறைந்து போனால். கதவம்-இந்தக் கதவை. தொண்டு-திருத் தொண்டை. உறைக்க-அந்த வேதாரணியேசுவரருடைய திருவுள்ளத்தில் உறைக்குமாறு. ப்:சந்தி. பாடி-ஒரு பாசு ரத்தைப் பாடியருளி. - அடைப்பித்த-மூடுமாறு புரிந்த. தழைத்த-தழைத்து ஓங்கியுள்ள. மொழியார்-வார்த்தை களைப் பேசுபவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாய எார். மொழி:ஒருமை பன்மை மயக்கம். உப்பாலார்அதோ அந்தப் பக்கத்தில் எழுந்தருளி யிருக்கிறார். உசேய் மைக்கட்டு. தாம் என்றது வேதாரணியேசுவரரை, இங்கு