பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பெரிய புராண விளக்கம்-7 இந்தத் திருமறைக் காட்டில். எப்பால்-எந்தப் பக்கத்தில். மறைவது-மறைந்து போவது. என-என்று திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய: இடைக்குறை. பிறகு வரும் 281-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'மாடங்கள் உயரமாக நிற்கும் அழகிய புகலியாகிய சீகாழியை ஆட்சி புரிந்தருளும் அரசராகிய அந்தத் திரு இான சம்பந்த மூர்த்தி நாயனாருக்குத் திருமாலும் பிரம தேவனும் பன்றியினுடைய வடிவத்தை எடுத்துக்கொண்டு நிலத்தைத் தோண்டித் தேடிப் பார்த்தும், அன்னப் Hறவையினுடைய உருவத்தை எடுத்துக் கொண்டு மேலே பறந்து தேடிப் பார்த்தும் திருவடிகளையும் திருமுடியையும் இன்னமும் பார்க்க முடியாதவராகிய வேதாரணியேசுவரச் தமக்கு நேரில் தம்முடைய தரிசனத்தை வழங்கியருள அக்கப் பெருமானாருடைய திருநடனத்தைத் திருநாவுக் கரசு நாயனார் தரிசித்து அந்தப் பெருமானாரை வணங்கித் துதித்து விட்டுத் திருநாவுக்கரசு நாயனாரும் தரிசிக்குமாறு அந்த வேதாரணியேசுவரர் தம்முடைய திருவுருவத்தைத் தரிசிக்குமாறு காண்பித்தருளியவுடனே 'பாட அடி யார்’ என்று தொடங்கிப் பரமேசுவரராகிய அந்த வேதா ரணியேசுவரரை ஒரு திருப்பதிகத்தினால் பாடியருளினார்.” பாடல் வருமாறு: . . . . . . ' மாடம் நீடு திருப்புகலி மன்ன ரவர்க்கு மாலயனும் கேடி இன்னம் காணாதார் நேரே காட்சி கொடுத்தருள ஆடல் கண்டு பணிந்தேத்தி அரசும் காணக் காட்டுதலும் பாட அடியார் என்றெடுத்துப் . பரமர் தம்மைப் பாடினார். : மாடம்-மாடங்கள் ஒருமை பன்மை மயக்கம், நீடுஉயரமாக நிற்கும். திரு.செல்வர்கள் வாழும்; திணை