திருநாவுக்கரசு நா யனார் புராணம 219, வண்ணப் பிறையோ டிவராணிர் வாய்மூர் அடிகள் வருவாரே. is so பிறகு வரும் 283-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: திருவதிகை வீரட்டானேசுவரர் தடுத்து ஆட்கொண்ட திருநாவுக்கரசு நாயனாரும், ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரோடு அந்தத் திருவாய் மூரில் இனிமையோடு தங்கியிருந்துகொண்டு தம்முடைய திருவுள்ளத்தில் கொண்டிருந்த விருப்பம் பொங்கிக்கொண்டு எழ திருவாய்மூரில் எழுந்தருளியிருக்கும் திருவாய்மூர் நாதேசுவர சுவாமிகளினுடைய திருவடிகளை அந்தநாய -னார் வாழ்த்தி வணங்கிவிட்டுத் தம்முடைய திருவுள்ளத்தில் மூண்டு எழுந்த பக்தியினால் செந்தமிழ் மொழியில் அமைந்த மாலையாகிய ஒரு திருப்பதிகத்தை அந்தத் திருவாய்மூர் ...நாதேசுவரருக்கு அணிந்து சிவஞானத்தைப் பெற்ற முனிவ ராகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரோடு மறுபடியும் திரும்பி வந்து திருமறைக்காட்டை அடைந்து ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும் இல்லாதவ ராகிய வேதாரணியேசுவரருடைய திருவடிகளை அந்த நாயனார் தரையில் விழுந்து வணங்கினார். பா டல்வரு மாறு: . ' ஆண்ட அரசும் பிள்ளையா ருடனே அங்கண் இனிதமர்ந்து பூண்ட காதல் பொங்கினழ வாய்மூர் அடிகள் அடியோற்றி முண்ட அன்பின் மொழிமாலை சாத்தி ஞான முனிவரொடு மீண்டு வந்து திருமறைக்காட் டெய்தி விமலர் தாள்பணிந்தார். ' ஆண்ட-திருவதிகை விரட்டானேசுவரர் தடுத்து ஆட் கொண்ட அரசும்-திருதாவுக்கரசு நாயனாரும்; தினை
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/225
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
