பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 . பெரிய புராண ఎarఉ56-7 காட்டில். ஆன-தமக்கு உரியவையான. பணி-உழவாரத். திருப்பணியையும் வேறு பல திருப்பணிகளையும்; ஒருமை. பன்மை மயக்கம். செய்து-புரிந்துகொண்டு. அமரும்-தங்கிக் கொண்டிருக்கும். நாள்-காலத்தில். சீத குளிர்ச்சியைப். பெற்ற மதி வெண்குடை-வெண்மையாகிய சந்திர வட்டக். குடையைப் பிடித்திருக்கும். வளவர்-சோழ மன்னருடைய. மகளார்-புதல்வியாரும். தென்னன்-பாண்டிய மன்னனு: டைய, தேவியாம்-பட்ட மகிஷியாக விளங்கும் மங்கையர்க் கரசியாரும். கோது-ஒரு குற்றமும். இல்-இல்லாத கடைக் குறை. குணத்து-நல்ல குணங்களைப் பெற்ற ஒருமை. பன்மை மயக்கம். ப்:சந்தி. பாண்டியா தேவியார்-பாண். டிய மன்னனுடைய பெருமையைப் பெற்ற பத்தினியாருக்கு. முன்-முன்னால். குலச்சிறையார்-அந்தப் பாண்டிய மன்ன. னுடைய முதல் அமைச்சராகிய குலச்சிறை நாயனார். போத-செல்லுமாறு. விட்டார் சிலர்-அனுப்பியவர்களாகிய, சில தூதர்கள். விட்டார்: ஒருமை பன்மை மயக்கம். புகலிபுகலியாகிய சீகாழியை..வேந்தர் தமை-ஆட்சி புரிந்தருளும். அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை. தம்: அசை நிலை. க்:சந்தி. காண-பார்க்கும் பொருட்டு. வந் தார்-திருமறைக் காட்டுக்கு வந்தார்கள்; ஒருமை பன்மை. மயக்கம். அடுத்து உள்ள 285-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'அவ்வாறு குலச்சிறை நாயனார் அனுப்பிய தூதர்கள் வந்து சேர்ந்து திருமறைக் காடாகிய வேதாரணியத்தை. அடைந்து நிலை பெற்ற புகழோடு விளங்கும் வேணுபுரி யாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய வேதியராகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரிடம் தாங்கள் வந்த காரியத்தை அறிவித்து விட்டு அந்த நாயனாரிடம் அடைந்து அவருடைய திருவடிகளைத் தரையில் விழுந்து பணிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய திருவுள்ளத்தில் மகிழ்ச்சியை அடைந்து ஒருவிதமான தீங்கும்.