பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 223. இல்லையோ என்று அந்தத் தூதர்களைக் கேட்டருள,. ..இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம் சீகாழியில் திருவவதாரம் செய்தருளியல் வரே, தேவரீருடைய இரண்டு திருவடிகளையும் தியானம். புரிபவர்களுக்குத் துன்பமும் இருப்பவை ஆகுமோ?' என அவர்கள் கூறுவார்களானார்கள்." பாடல் வருமாறு: வந்து சிவனார் திருமறைக்கா டெய்தி மன்னு வேணுபுரி அந்தணாளர் தமக்கறிவித் தவர்.பால் எய்தி அடிவணங்கச் சிங்தை மகிழ்ந்து தீதின்மை வினவத், "தீங்கும் உளவாமோ? இந்த உலகம் உயவந்தீர், இருதாள் நினைவார்க் கென்றுரைப்பார்.” வந்து சிவனார்-அவ்வாறு குலச்சிறை நாயனார். அனுப் பிய தூதர்கள் வந்து சேர்ந்து. திருமறைக்காடு-திருமறைக் காட்ாகிய, வேதாரணியத்தை. எய்தி-அடைந்து. மன்னு-- நிலை பெற்ற புகழோடு விளங்கும். வேணுபுரி-வேணுபுரி பாதிய கோழியில் திருவவதாரம் செய்தருளிய. அந்தணாளர் தமக்கு-வேதியராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா' சிடம்: உருபு ம்யக்கம். தம்:அசைநிலை. அறிவித்து-தாங்கள் வந்த காரியத்தை வாயில்காவலர் மூலமாகத் தெரிவித்து. விட்டு, அவர்ப்ால்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடத்தை. எய்தி-அடைந்து.' அடி-அவருடைய திரு. வடிகளை ஒருமை பன்மை மயக்கம். வணங்க. அந்தத் துரதர்கள் தரையில் விழுந்து பணிய. ச்:சந்தி. சிந்தைஅந்த நாயன்ார் தம்முடைய திருவுள்ளத்தில். மகிழ்ந்து. மகிழ்ச்சியை அடைந்து. தீது-ஒருவிதமான தீங்கும். இன்மை-இல்லாமையை. வினவ-அந்தத் திருஞான சம்பந்த, மூர்த்தில் நாயனார் கேட்டருள. எந்தவிதமான தீங்கும்.