பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224. பெரிய புராண விளக்கம் இல்லையோ?” என்று கேட்டருளினார் என்பது கருத்து த்:சந்தி. இந்த உலகம்-இந்த மண்ணுலகத்தில் வாழும் மக்கள்; இடஆகு பெயர். உய-உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம்; இடைக்குறை. வந்தீர்-சீகாழில் திருவவதாரம் செய்தருளியவரே, விளி. இருதாள்-தேவரீருடைய இரண்டு திருவடிகளையும். தாள்: ஒருமை பன்மை மயக்கம். நினை வார்க்கு-தியானிக்கும் மக்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். திங்கும்-தீய துன்பங்களும்; ஒருமை பன்மை மயக்கம். உள-இருப்பவை: இடைக்குறை. - ஆமோ-ஆகுமோ? இரா என்பது கருத்து. என்ற்- என உரைப்பார்-அந்தத் தூதர்கள் கூறுபவர்களானார்கள் ஒருமை மன்மை மயக்கம். - . .. உலகம் உய வந்தவர்: "காதலியார், மணிவயிற்றில் உருத்தெரிய வரும் பெரும் பேறுலகுய்ய உளதாக. , எவ் வுலகும் தனித்தனியே வாழவரும் அவர்.', உலகுய்ய மகப் பெற்றார்., வையமெலாம் உய்யவரு மறைச் சிறுவர்." அஞ்செழுத்தோதி ஏறினார் உய்ய உலகெலாம்.', 'படி யறியப்பழுதென்றே மொழிந்துய்ய நெறி காட்டும் பவள. வாயர்.", உலகுய்ய ஞானம் உண்டார்.', பர்டினார் பாரெலாம் உய்ய வந்தார்.', "உலகுய்ய உலவாத ஞானம் பெற்றார்.'. 'தாரணி உய்யஞான சம்பந்தன் வந்தான்.'; என்று சேக்கிழாரும், வையகத்தோர் உய்யவும். வந்தங் கவதரித்த வள்ளலை. என்று நம்பியாண்டார். நம்பியும் பாடியருளியவற்றைக் காண்க. - பிறகு வரும்.285-ஆம் பாடலின் கருத்து வருமாறு: சைவ சமய வழியும், வேதங்களின் வழியும் நிலை நிற்கவும், குற்றத்தைப் பெற்ற சமண சமய வழியை தவம் என்று சொல்லும் பொய்களைப் பேசுவதில் வல்ல சமணர்கள் புரியும் செயலை பாம் சகிக்க மாட்டோம் என்று அந்த - மங்கையர்க்கரசியார் கூறி விடுத்த தாதர்கள். கூறியதைத்