பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 - பெரிய புராண விளக்கம் அவ்வன்-அந்த வலிமையைப் பெற்ற. தொழிலோர்-தொழில் 》 களைப் புரிபவர்களாகிய சமணர்கள்: ஒருமை பன்ம்ை மயக்கம். செயல்-புரியும் திய செயல்களை; ஒருமை. பன்மை மயக்கம். மாற்றி-போக்கிவிட்டு ஆதி-ஆதிகாலம் முதல் இருந்து வரும். சைவநெறி-சைவ சமய வழி. விளங்க-விளக்கத்தைப் பெறும் வண்ணம். த்:சந்தி. சீர். சீர்த்தியை. கொள்-கொண்ட, சண்பைசண்பையாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய, த்:சந்தி. திருஅழகிய, மறையோர்-வேதியராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். தெய்வ-தெய்வ்த் தன்மையைப் பெற்ற, நீறு.விபூதியை. நினைந்து-எண்ணி, எழுந்தார்-மதுரையை நோக்கி எழுந்து வந்தருளினார். பிறகு உள்ள 287-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: * அவ்வாறு ஆகிய சமயத்தில், திருநாவுக்கரசு நாயனார். புகலியாகிய கோழியில் திருவவதாரம் செய்தருளியவரும். - ஆண்மையையும். தகுதியையும் பெற்றவரும் ஆகிய திரு. ஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம், 'தங்களுடைய உடம்புகளில் அழுக்கைப் பெருகச் செய்து திரியும் பொய் களைப் பேசுவதில் வல்லவர்களாகிய சமணர்கள் கடுபை, யாகிய செயல்களைப் புரியும் மாயாஜாலத்தில் மிகவும். வல்லவர்களாகிய அந்தச் சமணர்கள் அடியேனுக்கு முன் காலத்தில் புரிந்த கெட்ட செயல்களும் பல ஆகும்; ஐயோ! அடியேன் அவற்றைக் கூறுவதற்கு இப்போது இசைவை. உடையேன் அல்லேன்' என்று திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு: ஆய பொழுது திருநாவுக் - கரசு புகலி ஆண்டகைக்குக் காயம் மாசு பெருக்கிஉழல் கலதி அமணர் கடுவினைசெய்