திருநாவுக்கரசு நாயனார் புராணம்; 227 மாயை சாலம் மிகவல்லார்; அவர்மற் றென்னை முன்செய்த தீய தொழிலும் பல; கெட்டேன்; சொல்ல இசையேன்யான்' என்றார். ’’ ஆய-அவ்வாறு ஆகிய பொழுது சமயத்தில். திருநாவுக் கரசு. திருநாவுக்கரசு நாயனார்; திணை மயக்கம். புகலிபுகலியாகிய சீகாழியில் திருவவதாரம் செய்தருளியவரும்; வினையாலணையும் பெயர். ஆண்-ஆண்மையையும். தகைக்கு-தகுதியையும் பெற்றவரும் ஆகிய திருஞான சம் பந்த மூர்த்தி நாயனாரிடம்; உருபு மயக்கம். க்:சந்தி. காயம்-தங்களுடைய உடம்புகளில்: ஒருமை பன்மை மயக்கம். மாசு-அழுக்கை. பெருக்கி-பெருகுமாறு செய்து. உழல்-திரியும். கலதி-பொய்களைப் பேசுவதில் வல்லவர்க ளாகிய சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். கடு-கடுமை யான வினை-செயல்களை ஒருமை பன்மை மயக்கம். செய்-புரிந்து வரும். மாயை சாலம்-மாயா ஜாலத்தில்; மறைவாகப் புரியும் கெட்ட செயல்களில். மிக-மிகவும், வல்லார். வல்லவர்களாகிய அந்தச் சமணர்களென்னும் ஒருமை பன்மை மயக்கம். அவர்-அவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். மற்று: அசை நிலை. என்னை-அடியேனுக்கு: உருபு மயக்கம், இவ்வாறு கூறுபவர் திருநாவுக்கரசு நாய னார். முன்-அடியேன் சமண சமயத்தில் சேர்ந்திருந்த அந்தப் பழைய கர்லத்தில். செய்த-அடியேனுக்கு அந்தச் சமணர்கள் புரிந்த தீய-கெட்ட. தொழிலும்-செயல்களும், ஒருமை பன்மை மயக்கம். பல-பல ஆகும். கெட்டேன்ஐயோ. சொல்ல-அவற்றைக் கூறுவதற்கு. யான்-அடி யேன். இசையேன் - இ. ப் ேபா து இசையமாட்டேன். என்றார்-என்று திருநாவுக்கரசு நாயனார் 'திருவாய் மலர்ந் தருளிச் செய்தார். -
- பிறகு வரும் 238. ஆம் பாடலின் கரு த்து வருமாறு
له ..