பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பெரிய புராண விளக்கம்-7 என இவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, வரம்பு இல்லாத தூய்மையைப் பெற்ற விபூதியைப் பூசிக்கொள்ளும் சைவ சமயத்தைப் பாதுகாக்கும் மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார் என்னும் இரண்டு நாயன்மார்களையும் மதுரைக்குச் சென்று பார்க்கும் எண்ணத்தைக் கொண்டவன் அடியேன்; அந்த மதுரைமா நகரில் சைவ சமயத்தவர்களுக்குத் துன்பத்தைச் செய்யும் சமணர்கள் நிற்கின்ற நிலைமையை அழியுமாறு செய்து சைவ சமய வழியை வளர்த்து ஓங்கச் செய்வதை அல்லாமல் வேறு ஒரு செயலையும் புரியமாட்டேன்; இதற்கு ஆணை உம்முடையது. என்று ஆளுடைய பிள்ளையா ராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். பாடல் வருமாறு: " என்று கூற, எல்லையிலா நீறு போற்றும் இருவரையும் சென்று காணும் கருத்துடையேன்: அங்குத் தீங்கு புரிஅமணர் கின்ற நிலைமை அழிவித்துச் சைவ நெறிபா ரித்தன்றி ஒன்றும் செய்யேன் ஆணைஉம’ தென்றார் உடைய பிள்ளையார். ' என்று-என கூற-இவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. எல்லை-வரம்பு. இலாஇல்லாத: இடைக்குறை. நீறு-தூய்மையைப் பெற்ற விபூதியைப் பூசிக்கொள்ளும். போற்றும்-சைவ சமயத்தைப். பாதுகாக்கும். இருவரையும்-மங்கையர்க்கரசியார், குலச் சிறை நாயனார் என்னும் இரண்டு நாயன்மார்களையும். சென்று-மதுரைக்குப் போய். காணும்-பார்க்கும். கருத்து உடையேன்.எண்ணத்தைக் கொண்டவன் அடியேன். இவ் வாறு கூறியவர் திருஞானசம்பந்த மூர்த்திநாயனார். அங்கு