பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 229 அந்த மதுரை மாநகரில். த்:சந்தி, தீங்கு-சைவசமயத்தைச் சார்ந்தவர்களுக்குத் துன்பத்தை. புரி-செய்யும். அமணர்சமணர்கள்: ஒருமை பன்மை மயக்கம். நின்ற-நிற்கின்ற. நிலைமை-நிலைமையை. அழிவித்து-அழியுமாறு செய்து. ச்:சந்தி. சைவ நெறி-சைவ சமய வழியை. பாரித்தன்றிவளர்த்து ஒங்கச் செய்வதை யல்லாமல். ஒன்றும். வேறு ஒரு செயலையும். செய்யேன்-அடியேன் புரியமாட்டேன். ஆணை உமது-இதற்கு ஆணை ஆலவாயுடையாரே உம் முடையது; உம்மேல் ஆணை’ என்றபடி உடையஆளுடைய, பிள்ளையார்-பிள்ளையாராகிய திருஞான சம் பந்த மூர்த்தி நாயனார். என்றார்-என்று திருவாய் மலர்ந் தருளிச் செய்தார். பிறகு உள்ள 289-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: மதுரை மாநகருக்கு எழுந்தருளுவதைத் தீர்மானித்துத் தேவரீர் அந்த மதுரைக்கு எழுந்தருள இது சமயம் அன்று: அந்த மதுரை மாநகரத்தில் அந்தச் சமணர்கள் புரியும் கெட்ட மாயா ஜால வித்தைகளை அடியேனே சென்று அழித்து விட்டுத் திரும்பி வருகிறேன்' என்று திருநாவுக் கரசு நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய ஆகும் வழி களில் எல்லாவற்றையும் திருவாய் மலர்ந்தருளிச் செய்னா விட்டு அந்தத் திருஞான சம் ந்த மூர்த்தி நாயனாரை மறுக்க முடியாமல் திருநாவுக்கரசு நாயனார் வேதாரணியத்தில் தங்கிக் கொண்டிருக்கத் தாம் தம்முடைய ஆர்வத்தினால் செந்தமிழ் நாடாகிய பாண்டி நாட்டிற்கு சிவஞானத்தில் தலைமைப் பதவியைப் பெற்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் எழுந்தருளினார். பாடல் வருமாறு: "போமா துணிந்து ர்ே.அங்குப் போகப் போதா, அவ்வமணர் தீமா பையினை யானேபோய்ச் சிதைத்துவருகின்றேன் என்ன