230 பெரிய புராண விளக்கம்-1 ஆமா றெல்லாம் உரைத்தவரை மறுக்க மாட்டா தரசிருப்பத் தாமா தரவால் தமிழ்நாட்டில் போனார் ஞானத் தலைவனார். ' போமா-மதுரை மாநகருக்கு எழுந்தருளுமாற்றை. துணிந்து-திர்மானித்து.நீர்-தேவர்.அங்கு-அந்தமதுரைக்கு. ப்:சந்தி. போக-எழுந்தருள. ப்:சந்தி. போதா-இதுசமயம் அன்று. அவ்வமணர்-அந்தச் சமணர்கள்: ஒருமை பன்மை : மயக்கம். தி-கெட்ட மாயையினை-மாயா ஜாலவித்தை களை, ஒருமை பன்மை மயக்கம். யானே-அடியேனே. போய்-மதுரைக்குச் சென்று. ச்:சந்தி, சிதைத்து-அந்த வித்தைகளை அழித்து விட்டு. வருகின்றேன்-திரும்பி வரு கிறேன். என்ன-என்று திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, ஆமாறு-ஆகும் வழிகளில். ஆறு: ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-எல்வாவற்றையும். உரைத்து-திருவாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு. அவரை. அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்த வார்த்தைகளை; ஆகுபெயர். மறுக்க மாட்டாது- மறுக்க முடியாமல். அரசு-திருநாவுக்கரசு நாயனார்; திணை மயக்கம். இருப்ப-வேதாரணியத்தில் தங்கிக் கொண்டிருக்க, த்:சந்தி. தாம் என்றது திருஞான சம் பந்த மூர்த்தி நாயனார். ஆதரவால்-ஆர்வத்தினால், தமிழ் தாட்டில்-செந்தமிழ் நாடாகிய பாண்டி நாட்டிற்கு; உருபு மயக்கம். ஞான-சிவஞானத்தில், த்:சந்தி. தலைவனார். தலைமைப் பதவியை வகிப்பவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், போனார்-எழுந்தருளினார். அடுத்து உள்ள 290-ஆம் Lf? L- வின் கருத்து வருமாறு: வேணுபுரமாகிய சீகாழியை, அரசாட்சி, புரிந்தருளுக் அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் மதுரைக்கு எழுந்தருளிச் செல்ல அந்த - நாயனாரிடம் விடையைப் பெற்றுக் கொண்டு வேதாரணியத்தில் தங்கிக் கொண்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/236
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
