பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23s - பெரிய புராண விளக்கம்-; சிவத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் கிவபெருமான்களை வணங்கும் விருப்பத்தில் அந்த நாயனார் தலை சிறந்து நிற்ப, வரானார். ' பாடல் வருமாறு:

  • வீழி மிழலை தனைப்பணிந்து

வேத முதல்வர் தாம்இருப்ப ஆழி வலம்ஏந் தியஅரியால் ஆகா சத்தின் கின்றிழிந்த வாழி மலர்ந்த கோயில்தனில் மன்னும் பொருளைப் போற்றிசைத்துத் தாமும் நாளிற் பிறபதியும் . - பணியும் காதல் தலைநிற்பார். ' விழிமிழலை தனை-திருஞான சம்பந்த மூர்த்தி தாய, னார் திருவிழிமிழலைக்கு எழுந்தருளி விழிநாதேசுவரரை. தனை: இடைக்குறை அசைநிலை. ப்:சந்தி, பணிந்து. வணங்கிவிட்டு. வேத-இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங் 3. களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறை வேற்றியது ஒருமை பள்மை மயக்கம். முதல்வர்தாம்-தலைவராகிய, அந்தத் திரு ஞானசம்பந்த மூர்த்தி நாயனார். தாம்: அசை நிலை. இருப்ப-அந்தத் திருவிழி மிழலையில் தங்கிக்கொண் டிருக்க, ஆழி-சக்கராயுதத்தை. வலம்-தம்முடைய வலக். கரத்தில். ஏந்திய-ஏந்தியுள்ள். அரியால்-திருமாலினால். ஆகாசத்தின் நின்று-விண்ணிலிருந்து. இழிந்த-இறங்கிய. வாழி: அசை நிலை. மலர்ந்த-மலர்ச்சியை அடைந்த, கோயில்தனில்-விண்ணிழி விமானமாகிய திருக்கோயிலில். தன் அசைநிலை. மன்னும்-நிலைபெற்று எழுந்தருளி யிருக்கும். பொருளை-பரம் பொருளாகிய அ ந் த விழிதாதேசுவரரை. ப்:சந்தி. போற்று-வாழ்த்துக்களை. ஒருமை பன்மை மயக்கம்; முதல் நிலைத் தொழிற் பெயர். இசைத்து-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந் தருளிச் செய்துவிட்டு. த்:சந்தி. தாமும்-அந்தச் சிவத்