பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் . 243 காந்தார பஞ்சமப்பண் அமைந்த ஒரு பாசுரம் வரு மாறு: . ' நஞ்சினை உண்டிருள் கண்டர்பண் டந்தசு னைச் செற்ற வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழி மிழலையார் அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய மஞ்சனச் செஞ்சடை யார் என வல்வினை மாயுமே. ' சாதாரிப் பண்ணில் உள்ள ஒரு திருவிராகப் பாசுரம் வருமாறு: பட்டமுழ விட்டபணி வத்தினொடு பன்மறைகள் ஒது பணிநல் சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய அருள் செய்தழல்கொள் மேனி யவனுார் மட்டுலவு செங்கமல வேலிவயல் செந்நெல்வளர் மன்னு பொழில்வாய் விட்டுலவு, தென்றல் வரை நாறு பதி வேதியர்கள் வீழி நகரே. ’’ அதே பண் அமைந்த ஒரு திருவிர்ாகப் பாசுரம் வருமாறு: . பொன்னை புரிதரு சடையினர் பொடியணி வடிவினர் உன்னினர் வினையவை களைதலை மருவிய ஒருவனார் தென்னென இசைமுரல் சரிதையர் திகழ்தரு மார்பினில் மின்னென மிளிர்வதொர் அரவினர் பதிiழி மிழலையே. ”