பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பெரிய புராண விளக்கம்-7 ஆவுக்கருளும் ஆவடுதண் டுறையார் பாதம் அணைந்தி றைஞ்சி நாவுக் கரசர் ஞானபோ னகர்க்குச் செம்பொன் ஆயிரமும் பாவுக் களித்த திறம்போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார். ' பூவில்-இந்தப் பூ மண்டலத்தில். மலர்களால் எனலும் ஆம்; ஒருமை பன்மை மயக்கம். பொலியும்-புகழோடு விளங்கும். புனல்-நீர் ஓடும், பொன்னி.பொன்னைக் கொழிக்கும் காவிரியாற்றினுடைய பொன்னி பொன் கொழிக்கும்' என வருதலைக் காண்க. க்:சந்தி. கரை-கரை பின் வழியாக, போய்-எழுந்தருளி, ப்:சந்தி. பணிவார்வணங்குவாராகி; முற்றெச்சம். பொற்பு-தோற்றப் பொலிவு. அமைந்த-பொருந்தியுள்ளதும்; பெயரெச்ச வினையாலணை பும் பெயர். ஆவுக்கு-ஒரு பசுமாட்டிற்கு. அருளும்-தம்மு டைய திருவருளை வழங்கும். ஆவடுதண்டுறையார். குளிர்ச்சியைப் பெற்ற திருவாவடுதுறையில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் மாசிலாமணி ஈசுவரருடைய. பாதம்-திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். அணைந்துஅந்தத் திருவாவடுதுறையை அடைந்து, இறைஞ்சி-அந்த மாசிலாமணி ஈசுவரரைத் தரையில் விழுந்து வணங்கி விட்டு. நாவுக்கரசர்-திருநாவுக்கரசு நாயனார். ஞான-சிவஞான மாகிய, போனகர்க்கு-விருந்தை உண்டருளியவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு. ச்: சந்தி, செம்சிவப்பாக விளங்கும். பொன்-தங்கக் காசுகள்; ஒருமை பன்மை மயக்கம். ஆயிரமும்-ஆயிரத்தையும். பாவுக்குஅந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரத்திற்காக, அளித்த-வழங்கியருளிய திறம்வகையை, போற்றி-வாழ்த்திவிட்டு. ப்:சந்தி. போந்துஅப்பால் எழுந்தருளி. பிறவும்-வேறு சிவத் தலங்களுக்கும். பணிகின்றார்.அந்தத் திருநாவுக்கரசு நாயனார் எழுந்தருளி