:250 பெரிய புராண விளக்கம்-F அருமணியை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே." அந்த நாயனார் பாடியருளிய வேறொரு திருத்தான் கடகம் வருமாறு : நறுமா மலர்கொய்து நீரின் மூழ்கி நாடோறும் நின்கழலே ஏத்தி வாழ்த்தித் துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச் சூழுலகில் ஊழ்வினைவந் துற்றால் என்னே உறவாகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒளிதிரைநீர்க் கடல்நஞ் சுண்டுய்யக் கொண்ட அறவா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே." இந்தத் தலத்தைப் பற்றித் தக்கேசிப் பண்ணில் சுந்தர :மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு : தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி சித்திரப் பந்தர் சிக்கன இயற்றச் சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச் சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண் டடியேன் புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம் போற்றி போற்றிஎன் றன்பொடு புலம்பி அருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன் ஆவடு துறை ஆதினம் மானே.” பிறகு உள்ள 294-ஆம் கவியின் கருத்து வருமாறு : " சிவந்த சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய சோமேசுவரர் திருக்கோயில் கொண்டு எழுத் .தருளியிருக்கும் பழையாறை வடதளியை அந்தத் திருநாவுக் கரசு நாயனார் அடைய அந்தப் பழையாறை வடதளிக்கு அந்த நாயனார் எழுந்தருளிய காலத்தில் மயக்கத்தைப் பெற்ற சமணர்கள் மறைத்து வைத்திருந்த பழையாறை வட தளியில் நிலை பெற்று எழுந்தருளியிருக்கும் சிவபெருமானா
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/256
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
