பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் . 251 - - ராதிய சோமேசுவரரைத் தம்முடைய திருக்கரங்களைத் தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டு விட்டு அந்த நாயனார் பிறகு தரையில் விழுந்து அந்தச் சோமேசுவரரை வணங்கியருள அதனைப் பார்த்த வழியி னால் அந்தச் சமணர்கள் தங்களுடைய பொய்யாகக் கொண்ட விமானம் என்று கூற அதனைக் கேட்டருளி அந்த நாயனார் சகிக்காத திருவுள்ளத்தில் மிகவும் புழுக்கத்தை அடைந்து. பாடல் வருமாறு : செய்ய சடையார் பழையாறை எய்த அதனிற் செல்பொழுதில் மையல் அமணர் மறைத்தவட தளியில் மன்னும் சிவனாரைக் கைகள் கூப்பித் தொழுதருளக் கண்ட வாற்றால் அமணர்கள்தம் பொய்கொள் விமானம் எனக்கேட்டுப் - பொறாத உள்ளம் மிகப்புழுங்கி." இந்தப் பாடல் குளகம். செய்ய-சிவந்த சடையார்சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்ற வராகிய சோமேசுவரர். பழையாறை-திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பழையாறை வடதளியை. எய்த-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அடைய. அதனில்அந்தப் பழையாறை வடதளிக்கு உருபு மயக்கம். செல்-அந்த நாயனார். எழுந்தருளிய. பொழுதில்காலத்தில். மையல்-மயக்கத்தை அடைந்த, அமணர்-சம்னர் கள்; ஒருமை பன்மை மயக்கம். மறைத்த-மறைத்து வைத் கருந்த வடதளியில்-பழையாறை வடதளியில். மன்னும். நிலை பெற்று எழுந்தருளியிருக்கும். சிவனாரை-சிவபெருமா னாராகிய சோமேசுவரரை. க்:சந்தி. கைகள். தம்முடைய திருக்கரங்களை. கூப்பி-தம்முடைய தலையின் மேல் வைத்துக் கூப்பிக் கும்பிட்டு விட்டு, த்:சந்தி. தொழுதருள