252 பேரிய புராண விளக்கம்-7 பிறகு தரையில் விழுந்து அத்தச் சோமேசுவரரை வணங்கி யருள். க்:சந்தி. சுண்ட-அதனைப் பார்த்த ஆற்றால்-வழி: யினால், முறையினால், அமணர்கள்-அந்தச் சமணர்கள். தம்-தங்களுடைய. பொய்-பொய்யாக. கொள்-கொண்ட. விமானம் என-விமானம் என்று கூற; என: இடைக்குறை. க்:சந்தி, கேட்டு-அதனைக் கேட்டருளி. ப்:சந்தி. பொறாத. அந்த நாயனார் சகிக்காத, உள்ளம்-தம்முடைய திருவுள் ளத்தில். மிக-மிகவும், ப்:சந்தி. புழுங்கி-புழுக்கத்தை. அடைந்து: வருத்தத்தை அடைந்து. பழையாறை வடதளி : இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் சோமேசு. வரர். அம்பிகை சோம கலா நாயகி. தீர்த்தம் சோம தீர்த்தம். இது பழையாறை என்றும் வடதளி என்றும் இரண்டு தலங்களாக உள்ளது. பம்பைப் படை என்னும் ஊருக்குச் சென்று தெற்குத் திசையில் திரும்பித் திருமலை ராயன் ஆற்றைக் கடத்து கால் மைல் தூரம் சென்றால் பழை யாறையை அடையலாம். இந்த இரண்டு தலங்களையும் ஒரே திருப்பதிகத்தில் சேர்த்து நாயன்மார்கள் பாடியருளி யிருக்கிறார்கள். வடதளியில் எழுந்தருளியிருக்கும் சிவபெரு மானுடைய திருநாமம் தருமபுரீசர் என்பது. அம்பிகை விமல நாயகி. இந்தத் தலம் காமதேனுவின் புதல்வியாகிய விமலி என்பவளால் வழி படப் பெற்றது. இந்தத் திருக்கோயில் ஒரு. மேட் டின் மேல் அமைந்திருக்கிறது. இந்தத் தலத்தில் சிவ பெரு ான் , அம்பிகை ஆகியவர்களைத் தவிர வேறு. விக்கிரகம் ஒன்றும் இல்லை. இந்தத் திருக்கோயிலுக்கு. அருகில் துறையூர்ச் சிவப் பிரகாச சுவாமிகளுடைய சமாதிக் கோயில் உள்ளது. பழையாறை சந்திரன் வழிபட்ட தலம். அமர்நீதி நாயனார் வாழ்ந்திருந்த தலம் இது. காமதேனு. வினுடைய புதல்வியர்களுக்குள் பட்டி என்பவள் பூசித்தது. பட்டீச்சுரம். விமலி என்பவள் வழிபட்டது பழையாறை. வடதளி. சபளி என்பவள் வழிபட்டது திருமேற்றளி. இங்கே.
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/258
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
