பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 - பெரிய புராண விளக்கம்-7 திருநாவுக்கரசு நாயனார் அந்தச் சோமேசுவரரை வணங்கிக்: கொண்டு பழையாறை வடதளியில் தங்கிக் கொண்டிருந், தார். பாடல் வருமாறு : அந்த விமானம் தனக்கருகா ஆங்கோர் இடத்தின் பாங்கெய்திக் கந்தம் மலரும் கடிக்கொன்றை முடியார் செய்ய கழல்உன்னி மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப் பந்தம் கொண்ட குண்டர்திறம் uாற்றும் என்று பணிந்திருந்தார்.' அந்த-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்த விமானம் தனக்கு-விமானத்துக்கு. தன் அசை நிலை. அருகா-சமீப மாக, ஆங்கு-அங்கே, ஒர் இடத்தின்-ஒர் இடத்தினுடைய. பாங்கு-பக்கத்தை எய்தி-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அடைந்தருளி. க்சந்தி. கந்தம்-நறுமணம். மலரும்-உள்ள மலர்கள்ாகிய, ஒருமை பன்மை மயக்கம். கடி-வாசனை அகம். க்:சந்தி. கொன்றை-கொன்றை மலர் மாலையை: ஆகு பெயர். முடியார்-அணிந்த திருமுடியைப் பெற்றவ. ராகிய சோமேசுவரருடைய செய்ய கழல்-வெற்றிக் கழலைப் பூண்டு விளங்குபவையும் செந்தாமரை மலர்களைப் போலச் சிவப்பாக உள்ளவையும் ஆகிய அந்தச் சோமேசுவரருடைய திருவடிகளை; ஆகு பெயர். உன்னி-தியானித்துக் கொண்டு மந்த-மந்தப் புத்தியைப் பெற்றவர்களாகிய ஆகு பெயர். அமணர்-சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். வஞ்சனை யால்-தாங்கள் புரிந்த பஞ்சகமான செயலால் மறைத்தசிவலிங்கத்தை பறைத்து வைத்திருந்த வஞ்சம்-வஞ்சனை யைக் கொண்ட செயலை. ஒழித்தருளி-போக்கியருளி, அப்:சந்தி. பந்தம்-பாச பந்தத்தை, கொண்ட-பெற்ற. குண்டர்-சமணர்களாகிய இழந்த குணங்களையும் இழிவான செயல்களையும் பெற்றவர்களுடைய, ஒருமை பன்மை,