திருநாவுக்கரசு நாயனார் புராணம் 255 மயக்கம். திறம்-வஞ்சகமான இயல்பை, பாற்றும்-போக்கி, யருளுவீராக. என்று-என வேண்டிக் கொண்டு. பணிந்து. அந்தச் சோமேசுவரரை வணங்கிக் கொண்டு. இருந்தார். பழையாறை வடதளியில் அந்த நாயனார் தங்கிக் கொண்டி ருந்தார். அடுத்து வரும் 196-ஆம் கவியின் கருத்து வருமாறு : தேவரீருடைய திருமேனியைத் தரிசித்து அடியேன் தேவரீரைப் பணிந்தாலல்லாமல் வேறு இடத்திற்குச் செல்ல மாட்டேன்' எனத் திருநாவுக்கரசு நாயனார் திருவாப் மலர்ந்தருளிச் செய்து விட்டு தம்முடைய எண்ணத்தை. நிறைவேற்றும் வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார் திருவமுது செய்யாமலே பழையாறை வடதளியில் தங்கிக் கொண்டிருந்தார்; அவருடைய தலைவராகிய சோமேசு வரரும் அந்த நாயனார் திருவமுது செய்யாமல் பட்டினி யாகக் கிடப்பதைத் தெரிந்து கொணடருளி அந்தப் பழை பாறை வடதளியில் திருநாவுக்கரசு நாயனாரை வணங்கு வதற்காக உறுதியாகப் பல்லவ அரசனுக்கு அந்தச் சோமேசு வரர் சொப்பனத்தில் எழுந்தருளி திருவாய் மலர்ந்தருளிச் செய்கிறவரானார். பாடல் வருமாறு : - வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி யன்றிப் போகேன்"என் றெண்ணம் முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே; அண்ண லாரும் அதுஉணர்ந்தங் கரசு தம்மைப் பணிவதற்குத் திண்ண மாக மன்னனுக்குக் - கனவில் அருளிச் செய்கின்றார்.” வண்ணம்-தேவரீருடைய திருமேனி அழகை. கண்டு. தரி கித்து. நான்-அடியேன். உம்மை-தேவரீரை வணங்கிஅன்றி-- பணிந்தால் அல்லாமல். ப்:சந்தி. போகேன்-இந்தப் பழை . யாறை வடதளியை விட்டு விட்டு வேறு இடங்களுக்குச்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/261
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
