பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 * பெரிய புராண விளக்கம்-7 தரையில் விழுந்து வணங்க சிவஞானத்தைப் பெற்ற திருநாவுக்கரசு நாயனாரும் திருக்கோயிலுக்குள் நுழைந்து அந்தச் சோமேசுவரரைத் தரையில் விழுந்து வணங்கிவிட்டுத் தம்முடைய தலைவராகிய அந்த ஈசுவரருடைய சந்நிதியில் வாழ்த்தி வணங்குவாரானார்." பாடல் வருமாறு : ஆனை இனத்தில் துகைப்புண்ட அமணா யிரமும் மாய்ந்ததற்பின் மேன்மை அரசன் ஈசர்க்கு - *. விமானம் ஆக்கி விளக்கியபின் ஆன வழிபாட் டர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்திறைஞ்ச ஞான அரசும் புக்கிறைஞ்சி r நாதர் முன்பு போற்றுவார்.' ஆனை இனத்தில்-சிங்கத்தினால் மிதிக்கப்பட்ட யானை களினுடைய கூட்டங்களைப் போல; ஒருமை பன்மை மயக்கம். துகைப்புண் -பூண்டு இல்லாமல் கருவறுக்க பட்டு அமிதியுண்ட. அமண்-சமணர்கள்: ஒருமை பன்மை மயக்கம். திணை மயக்கம். ஆயிரமும்-ஆயிரம் பேர்களும், மாய்த்ததற் பின்-இறந்து போனதற்குப் பிறகு, மேன்மை-அந்த மேம் பாட்டைப் பெற்ற, அரசன்-பல்லவ மன்னன். சசர்க்கு. பரமேசுவரராகிய சோமேசுவரருக்கு. விமானம்-திருக்கோயி லையும் கோபுரத்தையும். ஆக்கி-கட்டுவித்து. விளக்கிய பின்- விளக்கத்தை அடையுமாறு செய்ததற்குப் பிறகு. ஆன-அந்த ஈசருக்கு உண்டான வழிபாட்டு-வழிபாட்டுக்கும். அர்ச்சனைக்கு-அருச்சனைக்கும். நிபந்தம் அறக் கட்டளை கள்; ஒருமை பன்மை மயக்கம். எல்லாம்-எல்லாவற்றையும். அமைத்து-உண்டாக்கி விட்டு. இறைஞ்ச-அந்தச் சோமேசுவர ரைத் தரையில் விழுந்து வணங்க, ஞான-சிவஞானத்தைப் பெற்ற, அரசும்-திருநாவுக்கரசு நாயனாரும்: திணை மயக்கம். புக்கு-சோமேசுவரருடைய திருக்கோயிலுக்குள் துழைந்து. இறைஞ்சி-அந்த ஈசுவரரைத் தரையில் விழுந்து