திருநாவுக்கரசு நாயனார் புராணம் . 26s; வணங்கி விட்டு. நாதர்-தம்முடைய தலைவராகிய அந்த ஈசுவரருடைய. முன்பு-சந்நிதியில் நின்று கொண்டு. போற்று வார்-வாழ்த்தி வணங்குவாரானார். . х அடுத்து வரும் 300-ஆம் கவியின் கருத்து வருமாறு: தங்களுடைய தலைகளில் உள்ள மயிர்களைத் தாங் களே பிடுங்கிக் கொண்டு விட்டு நின்று கொண்டே உணவு களை உண்ணும் இழிந்த சாதியிற் பிறந்த சமணர்கள் மறைத்து வைத்திருந்தாலும் அந்த ஒரு நிலையும் இல்லாத வர்களாகிய சமணர்கள் தம்முடைய வஞ்சகமான நிலைம்ை யினால் சிவலிங்கப் பெருமானை மறைத்து வைக்க முடியுமோ? " என்னும் கருத்தை வைத்துப் பாடியருளும் விலை இல்லாத உண்மைகளைக் கூறும் பல திருக்குறுந் தொகைகளை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி விட்டு திருவிழிமிழலைக்கு வெளியில் எழுந்தருளி அந்தத் திருவிழிமிழலையில் தங்கியிருந்து கொண்டே மூன்று இலை களைப் பெற்ற குலமாகிய ஆயுதத்தை ஏந்தியவராகிய சிவ பெருமானார் சேர்ந்து எழுந்தருளிய சிவத்தலங்கள் பிறவற். றிற்கும் எழுந்தருளி அந்தச் சிவத்தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை, அந்த நாயன்ார் வணங்குவதற்காக அடைவாரானார். பாடல் வருமாறு : * . 'தலையின் மயிரைப் பறித்துண்ணும் சாதி அமணர் மறைத்தாலும் நிலையி லாதார் நில்ைமையினால் மறைக்க ஒண்ணு மோ'என்னும் விலையில் வாய்மைக் குறுந்தொகைகள் விளம்பிப் புறம்போங் தங்கமர்ந்தே இலைகொள் சூலப் படையார்சேர் . இடங்கள் பிறவும் தொழஅனைவார்.'
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/267
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
