பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பெரிய புராண விளக்கம்-? பாத னைப்பழையாறை வடதளி. நாதனைத்தொழ நம்வினை நாசமே.”* ( ). * வாயி ருந்தமிழேபடித் தாளுறா ஆயி ரஞ்சம னும்மழி வாக்கினான் பாயி ரும்புனல் ஆறை வடதளி - மேய வன்னென வல்வினை வீடுமே.” (9): செருத்த னைச்செயும் சேணரக் கன்னுடல் எருத்தி றவிரலால் இறை ஊன்றிய - w அருத்த னைப்பழை யாறை வடதளித் திருத்த னைத்தொழு வார் வினை தேயுமே.'" (10): பிறகு வரும் 301-ஆம் கவியின் கருத்து வருமாறு: பொங்கிக் கொண்டு ஓடி வரும் நீர் நிரம்பிய போன் னைக் கொழிக்கும் காவிரியாற்றினுடைய இரண்டு கரைகளி லும் போர் புரியும் இடபவாகனத்தை ஒட்டுபவராகிய சிவ. பெருமானார் தங்கி எழுந்தருளியிருக்கும் பல சிவத்தலங் களுக்குள் அந்தத் திருநாவுக்கரசு நாயனார் நுழைந்து அந்தச் சிவத்தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான்களை வணங்கிவிட்டுச் செந்தமிழ் மொழியில் அமைந்த மாலைகளாகிய பல திருப்பதிகங்களை பும் அந்தச் சிவபெருமான்களுக்கு அணிந்துவிட்டு மேலே அந்த நாயனார் எழுந்தருளி. எத்தி ஊர்களிலும் நிரம்பி புள்ள புகழைப் பெற்றவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாய: னார் முடிவு இல்லாத திருத்தொண்டர்கள் தம்மை எதிர் கொண்டு வரவேற்கச் சிவந்த கண்களைப் பெற்ற இடப. வாகனத்தை ஒட்டுபவராகிய ஜம்புகேசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவானைக்காவிற்குப்பக்கத். திற்கு எழுந்தருளி அடைந்தார். பாடல் வருமாறு: பொங்கு புனலர் பொன்னியினில் இரண்டு கரையும் பொருவிடையார் -