பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 265; தங்கும் இடங்கள் புக்கிறைஞ்சித் தமிழ்மா லைகளும் சாத்திப்போய் எங்கும் நிறைந்த புகழாளர் ஈறில் தொண்டர் எதிர்கொள்ளச் செங்கண் விடையார் திருவானைக் காவின் மருங்கு சென்றணைந்தார்.' பொங்கு-பொங்கிக் கொண்டு ஓடி வரும். புனல்.நீர். ஆர்-நிரம்பிய, பொன்னியினில்-பொன்னைக் கொழிக்கும் காவிரியாற்றினுடைய உருபு மயக்கம். 'பொன்னி பொன் கொழிக்கும்' என வருதலைக் காண்க. இரண்டு கரையும். இரண்டு கரைகளிலும். கரை: ஒருமை பன்மை மயக்கம். பொரு-போர் புரியும். விடையார்-இடப வாகனத்தை ஒட்டு: பவராகிய சிவபெருமானார். தங்கும்-தங்கி எழுந்தருளியிருக் கும். இடங்கள்-பல சிவத்தலங்களுக்கும். புக்கு-அந்தத் திரு. நாவுக்கரசு நாயனார் நுழைந்து. இறைஞ்சி-அந்தச் சிவத். தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்களை வணங்கிவிட்டு. த்: சந்தி. தமிழ்-செந். தமிழ் மொழியில் அமைந்த மாலைகளும்-மாலைகளாகிய, பல திருப்பதிகங்களையும். சாத்தி-அந்தச் சிவபெருமான் களுக்கு அணிந்துவிட்டு. ப: சந்தி, போய்-அந்த நாயனார் மேலே எழுந்தருளி, எங்கும்-எந்த ஊர்களிலும். நிறைந்த" நிரம்பியுள்ள புகழாளர்-புகழைப் பெற்றவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார். ஈறு-கணக்கிட்டால் ஒரு முடிவு. இன்-இல்லாத கடைக்குறை. தொண்டர்-திருவானைக் காவில் வாழும் திருத்தொண்டர்கள்; ஒருமை பன்மை. மயக்கம். எதிர்கொள்ள-தம்மை எதிர்கொண்டு வரவேற்க. ச்: சந்தி. செம்.சிவப்பாக இருக்கும். கண்-கண்களைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். விடையார்-இடபவாக. அனத்தை ஒட்டுபவராகிய ஜம்புகேசுவரர். திருவானைக், காவின்-திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திரு.