பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 வெரிய புராண விளக்கம்-1 சளில் ஒன்றாகிய அப்பு ஸ்தலம். அதனால் ஜம்புகேசுவர ருக்கு அப்புலிங்கம் என்னும் திருநாமம் வந்தது. திருக் கோயிலில் மூலஸ்தானத்தில் எப்போதும் நீர் நிரம்பியிருப்ப தால் அதை இறைத்து விட்டு ஜம்புகேசுவரருக்குப் பூஜை செய்கிறார்கள். 'செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே" என்று தேவாரத்தில் வருவதைக் காண்க. முன் பிறவியில் சிலந்திப் பூச்சியாக இருந்து ஜம்புகேசுவரரை வழிபட்டு: அந்தப் புண்ணியத்தினால் அது மன்னராகப் பிறந்து கோச்செங்கட் சோழ நாயனார் என்னும் திருநாமத்தைப் வெற்றது. அந்த நாயனாரால் கட்டுவிக்கப் பெற்ற திருக், கோயிலையும் அந்தத் திருக்கோயிலில் ஜம்புகேசுவரர் ஒரு சித்தர் வேடத்தோடு எழுந்தருளி வந்து திருநீற்றையே சொத்தர்களுக்குக் கூலியாக வழங்கி அருளிக் கட்டுவித்தமை யால், 'திருநீறிட்டான் மதில் என்று வழங்கும் திருமதி: லையும் உடையது இந்தத் தலம். இந்தக் கருத்தைப் புலப் படுத்தும் ஒரு திருநேரிசையைத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளியிருக்கிறார். இக திருக்குறுக்கை விரட்டத்தைப் பற்றிய திருப்பதிகம். அந்தத் திருநேரிசை வருமாறு: சிலந்தியும் ஆனைக் காவில் திருநிழற் பந்தர் செய்து உவந்தவண் இறந்த போதே கோச்செங்க ணானும் ஆகக் கலந்தநீர்க் காவி ரிசூழ் கோனாட்டுச் சோழர் தங்கள் குலத்தனிற் பிறப்பித் திட்டார். குறுக்கைவி ரட்ட னாரே." ' ஆழித்தேர் மறுகிற்பயில் மெய்த்திரு நீறிட்டாண்க மதிள் சுற்றிய பொற்றிரு ஆனைக்கா' என்று வரும் திருப் புகழ்ப் பகுதியைக் காண்க. - ஜம்புகேசுவரரை அகிலாண்ட நாயகி பூசித்த ஐதிஷ்: யத்தைக் காட்டுவதற்காக இக் காலத்திலும் உச்சிக் காலத்.