பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் - 27 to ரரையும், பராய்த்துறை நாதேசுவரரையும் வணங்கும். பொருட்டு அந்த நாயனார் எழுந்தருளினார். பாடல். வருமாறு: " சிலந்திக் கருளும் கழல்வணங்கிச் செஞ்சொல் மாலை புலபாடி இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சிப் பாடியபின் மலர்ந்த சோதித் திருச்சிராப் பள்ளி மலையும் கற்குடியும் கலம்கொள் செல்வத் திருப்பராய்த் துறையும் தொழுவான் கண்ணினார்.' சிலந்திக்கு-ஒரு சிலந்திப் பூச்சிக்கு. அருளும்-தம்முடைய திருவருளை வழங்கும். என்றது அந்தச் சிலந்திப் பூச்சியை மறு பிறவியில் ஒரு சோழ மன்னனாகப் பிறக்குமாறு புரிந் தருளியதை. கழல்-வெற்றிக் கழலைப் பூண்டு விளங்கும் திருவடிகளை; ஆகு பெயர். என்றது ஜம்புகேசுவரருடைய திருவடிகளை. வணங்கி. அந்தத் திருநாவுக்கரசு நாயனார். பணிந்து விட்டு. ச் :சந்தி. செம்-செம்மையோடு விளங்கும். செம்மை-சொற்சுவை பொருட்சுவை என்பவை அமைந்த பான்மை. சொல்-செந்தமிழ் சொற்களைக் கொண்ட ; , ஒருமை பன்மை மயக்கம். மாலை. மாலைகளாகிய பல திருப் பதிகங்கள்: ஒருமை பன்மை மயக்கம். பல-பலவற்றை. பாடி-பாடியருளி. இலங்கு-விளங்கும். சடையார்-சடா பாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய எறும்பீசுவரர். எறும்பியூர் மலையும்-திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திரு எறும்பியூர் மலைக்கும் அந்த நாயனார் எழுந்தருளி. இறைஞ்சி-எறும்பீசுவரரை வணங்கி விட்டு. ப்:சந்தி. பாடிய-ஒரு திருப்பதிகத்தை அந்த நாய ாைர் பாடியருளிய. பின்-பிறகு. மலர்ந்த-மலர்ச்சியை அடைந்த சோதி-சோதியாகிய தாயுமானேசுவரர். த்:சந் தி.